உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

163

ஈசுவரோபாசனைக்கு முற்றும் மாறாக நடந்துகொண்டு, வேதாகம புராண இதிகாசங்களிற் கூறியபடி ஈசுவர பூஜை செய்பவர்களை அவைதிகர் என்றும், அவற்றிற்கு முழுவிரோதமாக நடக்குந் தம்மை மட்டும் வைதிகர் என்றுஞ் சொல்லிக்கொள்வது எவ்வளவு புதுமையாயிருக்கின்றது!” என்று கூறிமுடித்தேன்.

இவ்வுண்மைகளைக் கேட்டு இவற்றைச் சிறிதும் மறுத்து ரைக்க மாட்டாமல் அந்தப் பெண் பிள்ளை வாயடங்கிச் சும்மா இருந்தாள். அத்தையார் இவைகளைக் கேட்டும் இதுவரையில் வாயாடிவந்த அவள் அடங்கிவிட்டதைப் பார்த்தும் மிகுந்த மனக்கிளர்ச்சி உடையவராகிச் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்னும் உண்மையை இன்னும் அவர்கட்கு வலியுறுத்திக்காட்ட வேண்டுமென்னும் நோக்கத்தோடு, "அருமைக்குழந்தே, நீ இவ்வளவு சூக்ஷமமான உயர்ந்த ஞானப்பொருள்களைத் தெரிந் திருப்பாய் என்று நான் இதற்குமுன் நினைக்கவேயில்லை. இப்போது உன்னைச் சாக்ஷாத் லோகமாதாவாகிய அந்தச் சரஸ்வதி யாகவே பாவிக்கின்றேன். அகிலலோகநாயகனான சிவபெருமான் ஒருவரே உண்மையான பரம்பொருள் என்று இப்போது தான் நன்றாய் உணர்ந்தேன். இன்னும் உன்னிடத்திற் சில சந்தேகங்கள் கேட்டுத் தெளியவேண்டியதிருக்கின்றது. குழந்தையாகிய உனக்கு இவ்வளவு சிரமங் கொடுப்பதைப்பற்றி

நி

என் மனம் அதிகமாய் வருந்தினாலும், நல்ல சமயம்

கிடைத்திருக்கையில் அந்தச் சந்தேகத்தைக் கேட்டு நீக்கிக் கொள்ள வேண்டுமென்னும் ஆவல் என்னை முன்னுக்குத் தள்ளுகின்றது. உனக்கு ஆயாசமாக இல்லா விட்டால் இதற்கு விடைசொல்லவேண்டும். நம்மவர்கள் வேதத்திற் சிவனுக்கு இடமில்லையென்றும், சைவ மதம் வேதத்திற்குப் புறம்பானது என்னும் அர்த்தத்தோடு அதனை வேதபாஹியம் என்றும் சால்லிவருகிறார்களே. அவை உண்மையா? என்று கூறி

வினாவினார்.

இதைக்கேட்டதும் வாயாடியான அந்தப் பெண்பிள்ளை

இப்போது தனக்கொருபிடி கிடைத்ததெனச் சிறிது

மகிழ்ந்தவளாய் “ஆமம்மா, எனக்கும் அது நெடுநாட் சந்தேகம்; அது கோகிலத் தினாலேதான் நீங்க வேண்டும்” என்றாள்.

“ஏதோ ஏழையேன் அறிந்த மட்டிற் சொல்லுகிறேன்; குற்றங் குறைகள் இருந்தால் அத்தையாரும் நீங்களும் பொறுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/192&oldid=1582167" இலிருந்து மீள்விக்கப்பட்டது