உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் -14

""

கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். முழுமுதற் கடவுள் உபாசனையை மிகுத்தெடுத்துச் சொல்லுவதில் எஜுர் வேதமே மற்ற மூன்றுவேதங்களிலுஞ் சிறந்ததாய் விளங்கு கின்றது. அவ்வளவு சிறந்த எசுர்வேதத்தின் நடுவில் உள்ள சதருதரீயம் என்னும் மந்திர பாகம் முற்றும் முழுமுதற் கடவுளான சிவபெருமான் ஒருவரே பரம்பபொருள் என்று வலியுறுத்தி அவர்க்கு வணக்கங் கூறுதலை நம்மவர் உணராது பேசுந் தீவினைக்கு நாம் என் செய்யலாம்! அம் மந்திரபாகத்தை நாடோறும் அத்தியயனம் பண்ணிக்கொண்டு வந்தும் அதன் அர்த்தம் இன்னதென்றறியாமற் கிளிப்பிள்ளைகள் பேசுவது போற் கூவிச் சொல்லுதலால் நம்மவர் பெற்ற பயன் சிவ தூஷணக் கொடும் பாவமேயாம். அச்சதருத்ரீயத்தின் இருபத் தெட்டாவது மந்திரத்தின் கண் உள்ள "நமோபவாய ருத்ராயச நம சர்வாயச பசுபதயேச நமோ நீலக்ரீவாயச சிதிகண்டாயச என்னுஞ் சொற்கள் சிவபெருமானைக் குறித்தல் சிறு குழந்தைகளும் அறியக் கூடுமே. அதன் இரண்டாவது மந்திரமான “யாதேருத்ர சிவாதநூர் அகோரா பாபகாசிநீ தயாநஸ்தந்வா சந்தமயா கிரிசந்தாபிசாக்சீதி” என்பது ‘மலைகளின் மேல் எழுந்தருளியிருப்பவரே, உருத்திர சிவபெருமானே கொடிய தல்லாதாய்த் துன்பத்தைச் செய்யாதாய் உள்ள தமது திருமேனியோடு தோன்றி அடியேங்களை விளக்கியருள்க!” என்று பொருள்படுதலும், இதன்கண் ‘உருத்திர சிவன்' என்னும் பெயர்கள் வெளிப்படையாய் இருத்தலும் நம்மவர்க்குத் தெரியாமற் போனமை எவனோ! சுக்ல எசுர்வேதத்தில் உள்ள வாஜசநேய சங்கிதையில் ‘தேவரீர் அருளாளராய் இருத்தலாற் சிவன் எனும் நாமம்பெற்றீர்’ என்னும் பொருள் படச் “சிவோ நாமாஹி” என்று சொல்லப்பட்டிருப்பதை நம்மவர் உண்மையாக அறிந்திருந்தால் அப்பெருமானைப் புறம்பழிக்குங் கொடுந் தீவினைக்கு உள்ளாவார்களா! இருக்குவேதப் பத்தா மண்டிலத்தின் நூற்று முப்பத்தாறாம் பதிகத்தின் ஏழாவது மந்திரத்திலே “கேசி விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரோணாபிபத்ஸகா” என்று சிவபெருமான் விஷபானஞ் செய்து தேவர்கள் முதலான எல்லா உயிர்களையுங் காத்தருளினமை சொல்லப்பட்டிருக்கின்றது. இன்னும் அதன் ஆறாம் மண்டிலத்திலே அவர் எல்லா நோய்களையும் நீக்கும் ஆயிரம் மருந்துகளை வைத்திருப்பவர் (வைத்தியநாதர்) என்றும் எல்லா உலகங்களுக்குந் தலைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/193&oldid=1582168" இலிருந்து மீள்விக்கப்பட்டது