உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

165

என்றும், முதன் மண்டிலத்திலே அவர் பாட்டுகளுக்கும் வேள்விகளுக்குந் தலைவர்என்றும், இரண்டாவது மண்டிலத்தில் ஈசானரான அவர் பான் வண்ணமுடையவர் எல்லா உலகங்களுக்கும் வீரர்களுக்குந் தேவர்களுக்கும் முதல்வராய்த் தெய்வத்தன்மையினின்றும் நீக்கப் படாதவர் என்றும் அவர் பலவாறு புகழ்ந்து துதிக்கப்பட்டிருக்கின்றார். மற்றத்தேவர் கட்கில்லாத சிறப்பும் முழுமுதற்கடவுள் இலக்கணமும் சிவபெருமான் ஒருவருக்கே மிகப் பழையதான இருக்கு வேதத்திலும், வேதங்களிற் சிறந்த எசுர்வேதத்திலும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்க இவைகளுக்கு மாறாகச் சிவ தூஷணஞ் செய்து நம்மைப்போற் பிறந்திறக்கும் மனிதர்களை நம்மவர் வணங்கிவருவது எவரிட்ட சாபமோ, யாது தீவினையோ அறியேன்! “மானவன் ஆகாயத்தைத் தோல்போற் சுருட்ட வல்லனாங்காறுஞ் சிவனையறியும் அறிவாலன்றித் துக்கநிவர்த்தி உண்டாகாது” என்று சுவேதா சுவதரோபநிடதம் வலியுறுத்திச் சொல்லுவதால், சிவம் என்னுஞ் சொல்லைக் கேட்டாலுங் கசப்போடுபோகும் நம்மவர்க்குத் துக்க நிவர்த்தி எங்கே உண்டாகப் போகின்றது! அரசனைப் போன்ற மேம்பாடு அடையவேண்டினோர் அவ்வரசனுடைய தயவைப் பெற்றாலன்றி அதனை அடைய முடியுமோ? அல்லது, அவன் அதிகாரத்தின் கீழ் அலுவல் பார்க்குந் தாழ்ந்த ஊர்காவற் சேவகனை வேண்டினால் அவ்வரசச் செல்வத்தைப்பெற முடியுமோ? அது போல அழியாத பேரின்பச் செல்வத்தைப் பெற விரும்பினோர் அதனைத்தரவல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வழிபட்டால் மாத்திரம் அதனைப் பெறலாமேயல்லாமல், பிறந்திறக்கும் மனிதர்களையும் அங்ஙனமே பிறந்திறக்கும் மற்றத் தேவர்களையும் எத்தனைகாலம் வணங்கிவேண்டினாலும் அதனை அடையவே முடியாது” என்று

கூறினேன்.

இவ்வளவுங்கேட்ட அத்தையார் மிகமகிழ்ந்து “கண்மணி, கோகிலா, நம்மில் எத்தனையோ வருஷம் வேதம் ஓதிவருபவர் களுக்கும், தெரியாத இந்தப் பிரஹமஜ்ஞான ரகசியங்களை யெல்லாம் நீ எப்படியம்மா அறிந்தாய்! அந்தச் சாக்ஷாத் ப்ரஹ்மமே சிவபெருமான் என்று இப்போது நன்றாய் அறிந்து எங்கள் அஞ்ஞானம் நீங்கினோம்!” என்று சொல்லி நிறைந்த அன்போடும் அருகிருந்த என்னைக் கட்டியணைத்து முத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/194&oldid=1582169" இலிருந்து மீள்விக்கப்பட்டது