உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் -14

இட்டார். இவ்வுண்மைகளை யெல்லாங் கேட்டுக் காணவந்த பண்பிள்ளைகள் “அந்தச் சிவத்தினுடைய பெருமை இப்படியா இருக்கின்றது! பாபஜென்மமாகிய நமக்கு இதுவரையில் தெரியாமற் போயிற்றே! இன்று தான் சுதினம் கோகிலத்தால் ஞானப்பிரகாசத்தை அடைந்தோம்! இவளுக்கு நாம் எப்படி நன்றிசெலுத்தப் போகின்றோம்! அம்மா குழந்தே, நீ தீர்க்காயுசாயிருந்து நம்மவர்களுக்குச் சரஸ்வதி போல் விளங்கி இந்தச் சிவஞானத்தை உபதேசித்து நம்மவர்களைக் கடைத் தேற்றும்படி அந்தக் கைலாசபதியைப் பிரார்த்திக் கின்றோம்” என்று சொல்லி என்னைத்தொட்டு முத்தம் வைத்தவர்களாய் அன்பாற் கண்ணீர் சிந்தினார்கள். என்னோடு வாதாடி வந்த பெண்பிள்ளையும் இதுவரையிற் சும்மா இருந்தாலும் சிவபெருமான் பிரபாவங்களைக் கேட்ட புண்ணியத்தால் மனந்திருந்தி “அம்மா கோகிலம், நான் உனக்கு அபசாரம் செய்தவளாய்விட்டேன். சிவபெருமான் உண்மை தெரியாமல் நான் பேசின குற்றத்தைப் பொறுக்கும்படி உன்னைக் கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய புருஷாள் இவைகளை அறியாமலிருப்பதால் நாமும் இந்த அஞ்ஞானக்கும்பியிற்கிடந்து ஜன்மத்தை விருதாவாக்கி வருகின்றோம். சிவஞானச் செல்வமே, உனக்கு நான் மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிட்டேன். ஆனாலும் இன்றைக்குத் தான் உண்மையைத் தெரிந்தேன்” என்று உள்ளபடியே மனங்கரைந்து பேசினாள். இவர்கள் உண்மை தெரிந்து மனந்திருந்திச் சிவபக்தி அடைந்து ஒன்றுக்கும் பற்றாத என்னைப் புகழ்ந்துபேசியதெல்லாம் என் உள்ளத்தை உருகச் செய்தன! சிவபெருமான் திருவருட்டிறத்தை நினைந்து மனங்கசிந்திருந்தேன். பிறகு, வேறு சிலவற்றைப் பேசிக்கொண் டிருந்தோம். இதற்குட் பிற்பகல் மணி மூன்றாய் விட்டது. அவரவர் கணவர்களும் பிள்ளைகளும் அலுவலிலிருந்தும் பள்ளிக்கூடத் திலிருந்தும் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்புவார்கள் ஆகையால், அவர்கள் வருதற்குமுன்னமே வீட்டுக்குச் செல்ல என்னை விடை கேட்டார்கள். அங்ஙனமே அவர்கள் செல்லுதற்கு விடைகொடுத்தேன். அத்தையார் மட்டும் என்னோடு இரண்டு நாள் இருக்க விரும்பி இங்கே தங்கிவிட்டார்கள்.

L

இப்போது இரவு பதினொருமணி அத்தையார், என் தமையன் என் தமையன் மனைவி எல்லாரும் அயர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/195&oldid=1582170" இலிருந்து மீள்விக்கப்பட்டது