உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர

கோகிலாம்பாள் கடிதங்கள்

தூண்

169

களும் எனக்கு ஆறுதலைத் தரவில்லை. எனக்குண்டான மனப்புழுக்க உடம்பின் புழுக்கத்தால், இருண்ட அவ்வானை ஓர் க்கன் உடம்பாகவும், அதிற்றோன்றும் மீன்களை அவனுடம் பிற்றோன்றிய வியர்வைத் துளிகளாகவும் நினைத்தேன். கீழே தெருவிலுள்ள விளக்குகளில் அவ்விளக்கேற்றும் வேலைக்காரன் நிறைய, எண்ணெய் விடாமல் மிச்சம் பிடித்துக்கொண்டு போனமையாற் போலும் அவற்றிற் சில அணைந்துபோயின, வேறுசில அணையுந் தறுவாயில் இருந்தன. ஊர்காவற்சேவகன் தூக்க மயக்கத்தால் மெல்ல நடந்தபடியாய் இடையிடையே சீழ்க்கை அடித்துக் கொண்டு செல்வதை அறிந்தேன்; இஃது எனக்கு ஒருவகையான அச்சத்தைத் தந்தது. இதுவுமல்லாமல், எதிரேயுள்ள குடிமக்கள் தோட்டத்தில் ராக்காலத்துப் பறவைகளான ஆந்தை கூகை கோட்டான் முதலியன இரைதேடிக் கூப்பிடும் ஒலியானது யான் வெருக் கொள்ளும்படி செய்தது. ஆனால், இவ்விருளின் ஊடே ஊடே மிக உயர்ந்த நகர விளக்குக்கூண்டின் ஒளி அடுத்தடுத்துத் தோன்றியவாறாய்ச் சுழன்று செல்கையில் அஃது என் கருத்தைக் கவர்ந்தது. நள்ளிருட் காலம்போல் தாங்குதற்கரிய துன்பம் வந்து கவிந்தகாலத்திலுங்கூடச் சுழன்றுசெல்லும் அவ்விளக் குக்கூண்டின் அழகிய ஒளிபோல் இறைவனருளால் இன்பமும் இவ்வுலக வாழ்க்கையில் இடையிடையே சுழன்றுவந்து மக்கள் உயிரைத் தளிர்க்கச் செய்யுமென எண்ணினேன். இருள்செறிந்த இராப் பொழுதிலும் முயற்சி மிகுந்து இரைதேடி இயங்குஞ் சில பறவைகளைப் போல் மக்கள் சிலருந் தமக்குப் பேர் இடுக்கண் வந்த பொழுதிலுஞ் சுருசுருப்புடையராய் முயற்சிசெய்ய வேண்டுமே யல்லாமல் மனந்தளர்ந்து மடிந்திருத்தல் ஆகாதெனவும் உணர்ந்தேன்.இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருக்கை யிற் கீழே யான் படிக்கும் அறையிலுள்ள கடிகாரம் ஒரு மணி அடித்தது. திறந்த வெளியில் உலவினமையால் என் உடம்பின் வெக்கையுந் தணிந்தது. பகலவன் மறைந்து பதினைந்து நாழிகை ஆனமையால் வெளி வெப்பமும் ஆறியது. ஒரு வகையான குளிர்ங்காற்றும் வீசத் துவங்கியது. அப்போது எனக்கு அயர்வும் நல்ல தூக்கமும் வந்தன. உடனே படிவழியாற் கீழ்மாடத்தில் இறங்கி என் மெத்தைமேற் போய்ப் படுத்துச் செவ்வையாய் உறங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/198&oldid=1582173" இலிருந்து மீள்விக்கப்பட்டது