உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் -14

நெடுநேரம் யான் நன்றாய் உறங்கியிருக்க வேண்டும். னென்றால் அச்சமும் மகிழ்ச்சியுங் கலந்த ஒரு கனவுகண்டு யான் கண்விழித்தபோது மணி ஐந்தடித்தது. அங்ஙனம் யான் விழிப்பதற்கு முன்னே பின்வருமாறு கனவுகண்டேன். நீங்களும் யானும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும்பாட்டையினூடே செல்வது போல ஒரு தோற்றம் உள்டாயிற்று. இப்பாட்டையின் ருபுறுத்தும் பல வகையான மரங்கள் அடர்ந்து மேலே பந்தல் இட்டாற்போல் இருந்தன; அதன் இரு பக்கங்களினும் மலைகளுங் காடுகளுங் காணப்பட்டன. யான் தங்களோடு சேர்ந்து வழி நடக்கப் பெற்றமையால் மெய் மறந்த களிப்புடையேன் ஆகி, அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளைப் பற்றியும் வகைவகையான பறவைகளைப் பற்றியுந் தங்களை வினாவத் தாங்களும் என் மேற் பேரன்புபூண்டு மகிழ்ந்து விடைசொல்லப் பெரிதும் அளவளாவிக்கொண்டு தங்களோடு உடன் செல்லக் கண்டேன். அப்போது மாலைக் காலமாயிருந்தது. கதிரவன் மேல்பால் வட்டத்தின் கீழ் இறங்கி மறைந்துபோய்விட்டான். மாலை வெளிச்சம் வரவரச்சுருங்கி இருள்வந்து மூடுவதுபோற் றோன்றிற்று. அப்பொழுது தாங்கள் துணுக்குற்றுக் “கண்மணி, நாம் எந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதென்று தெரியவில்லை. முன்பின் ஆராய்ந்து பார்க்கக் கூடாத படி திடீரென உன்னை அழைத்துக் கொண்டு ஆள்வழக்கம் இல்லாத இப்பாதையில் யான் வரும்படி நேரிட்டமைக்காக மிகவும் வருந்துகின்றேன். என்னைப் பற்றியமட்டில் எனக்கு அச்சம் சிறிதும் இல்லை. மெல்லிய இயல்பு வாய்ந்த இளமங்கையாகிய உன்னை இங்ஙனம் அழைத்துவந்து உன்னைத் துன்பத்திற்கு உட்படுத்து வதைப் பற்றியே என் நெஞ்சம் நினைத்துத் துடிக்கின்றது. என்று கூறக் கேட்டு, யான் மிக மனம்நைந்து “பெருமானே, என் பொருட்டுச் செல்வப் பெருந்தகையாகிய தாங்கள் இப்படி யெல்லாம் வந்து வருந்துகையில், எனக்குத் துன்பந்தருவதாகச் சொல்வதை அறியக்கூடவில்லை. தங்களோடு ருக்கையில் எனக்குத் துன்பம் என்பது இன்னதென்றே புலப்படவில்லை. தங்களோடு அன்பால் அளவளாவப்பெற்ற வ்வின்பத்திலேயே என் உள்ளம் உள்ளம் படிந்து நிற்கின்றது என்றேன். இவ்வாறு நான் சொல்லி முடித்து ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும். எனது இடது கைப்புறமாய்ப் பாட்டையின் ஓரத்திலிருந்து ஒரு மரச் மரச்செறிவிலிருந்து

.

நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/199&oldid=1582174" இலிருந்து மீள்விக்கப்பட்டது