உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி

கோகிலாம்பாள் கடிதங்கள்

யஉ

171

ஏழெட்டுப் பேர் சடுதியில் வந்து நம்மை வழிமறித்தார்கள். அவர்களுடைய உடம்பின் தோற்றமானது மிகுந்த அச்சத்திற்கு இடந்தரா விட்டாலும், அவர் களெல்லாருங் கையில் தடிக்கம்பு பிடித்தவராயும், இடுப்பினின்றுங் கட்டித் தொங்கவிட்ட காடுவாள் உடையராயும் இருந்தமை யாலும், ஆள்வழக்க மில்லா அக்காட்டுவழியில் அந்நேரத்தில் வந்து வழிமறித்த மையாலும் அவர்கள் நோக்கம் இன்னதென்பது மின்னல் ஒளிபோற் சுருக்கென எனக்குப்பட்டது. அவர்களைக் கண்ட திகிலால் மெய்யும் மனமும் நடுங்கி அயர்வுற்றுத் தங்கள் மேற் சாய்ந்து தங்களை என் கைகளாற் சுற்றி இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு உணர்விழந்தேன். அங்ஙனம் யான் அறிவுமயங்கிய பின் நடந்தது இன்னதென்று யான் அறியேன். திரும்பவும் யான் என் உணர்வுபெற்று விழித்துப் பார்க்கையில் யான் ஒருமலைக் குகையில் அடைபட்டிருக்கக்கண்டேன். இப்போது என் உயிரைப் பற்றிய அச்சம் எனக்குச் சிறிதும் இல்லாமற்போயிற்று. ஆனால் என் பக்கத்திலிருந்த தங்களைக் காணாமல் ‘ஓ என் பெருமானே!' ஓ என்று வீறீட்டு அலறினேன். அப்போது அழாதே, அலறாதே, அஞ்சாதே என்னுஞ் சொற்கள் என்காதில்விழ, அச்சொற்களைக் கேட்டு, வழுவி விழுவோனைச் சடுதியில் ஒருவர் தாங்கினாற் போற் சிறிது ஆறுதல்பெற்று, அச்சொற்கள் வந்தமுகமாய் நோக்க,எனக்கு எதிரே சற்று எட்டி ஒருபக்கமாய் நீண்டு உயர்ந்த ஒருவன் நிற்றலை உணர்ந்தேன். உடனே ஐயா என் கணவன் எங்கே? என் கணவன் எங்கே? என்று பதறிக்கேட்டேன். அதற்கு அவன் உன் கணவன் இருக்கிறான். உன் மாமன் உனக்குக் கொடுத்த நாற்பதினாயிரம் ரூபாவும் நீ எனக்குக் கொடுத்தால் தான் நீ அவனைக் காணலாம்' என்றான். ஐயா, அந்த நாற்பதி னாயிர ரூபாவும் நான் உமக்குக் கொடுத்துவிடுகிறேன்; என் மேல் உள்ள என் நகைகளெல்லாம் உமக்குக் கொடுத்து விடுகிறேன். நான் ஒரு கந்தைத் துணியை உடுத்துக்கொண்டு இந்தப் பட்டுப்புடவை யையும் உமக்குந் தந்து விடுகிறேன். இன்னும் உமது வீட்டுவேலை யெல்லாம் வேண்டுமானாலும் யான் செய்கிறேன். என் கணவனை மட்டும் ஒன்றுஞ் செய்யாமல் எனக்குக் கொடுத்து விடும் என்றேன். இச் சொற்களைக் கேட்டதும் அவன் அங்கே நில்லாமல் மறைந்துபோனான். ஆனால் யானோ தனியாளாயிருந்து தங்களைக் காணாமையால் ஆற்ற முடியாமல் விம்மி விம்மி

ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/200&oldid=1582175" இலிருந்து மீள்விக்கப்பட்டது