உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் -14

அழுதேன். என் விழிகளிலிருந்து வடிந்த நீர் தலை யணையை நனைத்துவிட்டது. விடியற்காலையிற் குடி மக்கள் தோட்டத்தி னின்று துயில்நீங்கி எழுந்த பறவைக் கூட்டங்களின் ஒலியானது அந்த நிலைமையில் என்னைத் தூக்கத் தினின்றும் எழுப்பி விட்டது. அதனால், யான் கண்டது கனவே யல்லாமல் வேறு அன்று என ஒருவாறு ஆறுதல் அடைந்தேன். என் தந்தையார் சொல்லிய காடுஞ்சொற்களைக் கேட்டிருந்து எனக்கு சொன்ன என் தங்கையின் மொழிகளால் இக்கனவு எனக்குந் தோன்றியதோ! அல்லது இது நனவின்கண் நிகழும் நிகழ்ச்சியை முன் அறிவிப்பதோ! என்று பலவாறு எண்ணி எண்ணி என் உள்ளம் தடுமாறி நடுங்கியது! இது நனவில் நடக்குமானால் ஏழையேன் இத்துன்பத்தைத் தாங்குமாறெப்படி! என்று இறைவனைத் தொழுது வருந்தினேன்.

66

இவ்வாறு யான் படுக்கையிலேயே வருந்திக்கொண்டு அமர்ந்திருக்கையில் என் அருமைத்தமையன் என்னிடம் வந்து என்ன கோகிலா, வாட்டமாய் இருக்கின்றாயே! ஓ! நீ மிகவும் அழுத வகையாய் உன் முகங் காணப்படுகின்றதே! ஏதேனுந் துயரமான கனவு கண்டனையோ! இரவில் நானும் ஒரு பொல்லாத கனவு கண்டேன். நீயும் நானும் அந்தப்பாரசிக கனவானும் எங்கேயோ செல்ல, அப்போது திருடர்கள் புகுந்து நம்மை வேறுவேறாய்ப் பிடித்துக்கொண்டுபோய்ப் பாழான இடங்களிற் சிறையாய் அடைத்து வைக்கக் கனவுகண்டு உன்பொருட்டும் அந்தப் பாரசிக கனவான் பொருட்டும் யான் அப்போதுற்ற துன்பம் இவ்வள வென்று எடுத்துச்சொல்ல முடியாது! பறவைகளின் கூச்சலால் அந் நடுக்கத்தினின்றும் எழுப்பட்டேன். அதனாலே தான், உ னே உன்னைப் பார்ப்பதற்காக விரைந்து வந்தேன். யாது நேர்ந்தது?” என்று கவலையோடு வினாவினான். எங்கள் இருவர் கனவும் ஏறக்குறைய ஒத்த நிலைமையில் நிகழ்ந்தமை கண்டு எனக்கு மிகுந்த அச்சமும் வியப்பும் உண்டாயின. யானும் எனது கனவின் வரலாற்றை எடுத்துரைத்தேன். கனவு நிகழ்ச்சியை நம்பாத என் தமையனும் யான் சொல்லியதைக் கேட்டு வியப்பும் அச்சமும் அடைந்ததோடு, இது பின் வருவதை முன்னறிவிப்பதாய் இருக்கலாமோவென்று ஐயுறவுகொண்டவனாய்ச் சிறிதுநேரஞ் சும்மா இருந்து, பிறகு என்னைத் தேற்றுவதற்காகக் “கோகிலா, அது கிடக்கட்டும், நீ கண்டதும் நான் கண்டதுங் கனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/201&oldid=1582176" இலிருந்து மீள்விக்கப்பட்டது