உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் -14

இவைகளைப் பார்க்கவுங் கேட்கவுஞ், சென்ற இரவுகண்ட கனாவினால் உண்டான துயரம் என்னை விட்டு அகன்றது. என் அகத்தே ஒரு கிளர்ச்சி எழுந்தது. இத்தோற்றங்களை நாங்கள் வியந்து பேசிக்கொண்டு ஆங்கிலர் இசைக்கருவி முழங்கும் மண்டபத்தின் கீழ்ப்பாங்குள்ள இலைக் கொடி மண்டபத்தினுட் சென்று, அங்கே இடப்பட்டிருந்த உயர மணைகள்மேல் ஏற்றிவிட்ட அழகிய பச்சிலைக்கொடியானது அம் மண்டபத்தின் சுற்றுப்பரப்புமுழுதும் பம்பிப்படர்ந்து தன் நெருங்கிய லைகளால் ஞாயிற்றின் ஒளி உள் நுழையாவாறு மறைத்துக் குளிர்ந்த நிழலைத் தந்தது. கீழே மரப்படிகள் அமைத்து அவற்றின்மேல் வரிசை வரிசையாக வைத்திருக்கும் மண் தொட்டிகளில் வளர்க்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அழகிய பசுஞ் செடிகள் எம்கண்களைக் கவர்ந்தன. ஒவ்வொரு செடியின் வடிவமும் வியக்கத்தக்கதாயிருந்தது. அவற்றுட் சிலவற்றின் மேல் பூத்திருக்கும் மலர்களிற் சிவப்புப் புள்ளிகள்வாய்ந்த மஞ்சள்நிறந் திகழ்ந்தது. சிலவற்றில் திரிக்குழாய்போல் நீண்டு வாய் அகன்ற நீலப் பூக்கள் இருந்தன. ஆனால், இவற்றின் நிறத்திற்குத் தக்கபடி இவற்றில் நறுமணம் அமையாதது மட்டுந்தான் எனக்கு ஒரு குறையாய்த் தோன்றியது. தமிழ்நாட்டிலுள்ள அழகிய நறுமணம் மிக்க பூஞ்செடிகட்கும், மணம் இன்றி அழகு மட்டும் வாய்ந்த இவ் அயல்நாட்டுப் பூஞ்செடிகட்கும் உள்ள வேற்றுமை என்னுள்ளத்தில் வலிமைபெற்றுத் தோன்றியது. ஆயினும், அயல்நாட்டுப் பூஞ்செடி கட்குள்ள இக்குறையை நீக்குதற்கு அவற்றுள் ஒன்றான ரோஸ் என்னும் நிலத்தாமரைப் பூஞ்செடி ஒன்றிருக்கின்றதன்றோ. ஆ! அதன் அழகும் மணமும் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அடங்கா இன்பத்தைத் தருகின்றன! நம் தமிழ்நாட்டிலுள்ள சிவந்த நீர்த் தாமரையின் அழகையும் மணத்தையும் மட்டுமே அவற்றிற்கு ஒப்பாகச் சொல்லலாம் என்று நான் எண்ணுகையில், அங்குள்ள தோட்டக்காரன் அக்கொடிப்பந்தர் மண்டபத்தின் வடபால் உள்ள அகன்ற ஒரு நீர்த்தொட்டியிலிருந்து நீர் முகந்த ஒரு தகரவாளியை கையிற்றூக்கிக்கொண்டு அதன் குழாய்வாயிற் சிறு சல்லடை வழியே பல கதிர்களாய் நீர்சொரியுமாறு அங்குள்ள தொட்டிச் செடிகட்கு நீர்விட்டுக்கொண்டு வரக்கண்டோம். கண்டதும் அவனை நோக்கி “ஐயா, இங்கே ரோசாச்செடி இருக்கிறதா?" என்று கேட்டேன். அவன் ‘அம்மா இங்கே

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/203&oldid=1582183" இலிருந்து மீள்விக்கப்பட்டது