உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

175

ம்

அழகான செடிகள் மட்டும் தான் இருக்கவேணும், அழகுக்காகச் செடிகள் வைச்சிருக்கும் இடத்தில் மணமுள்ள பூஞ்செடிகளும் கனி முதலானது உள்ள செடிகளும் இருக்கப்படாது என்று வெள்ளைக்காரத் துரைகள் சொல்லுகிறார்கள். இந்தத்தோட்ட வெள்ளைக்காரருக்காகவே ரொம்பக் கருத்தாய் வைச்சு வளர்க்கிறார்கள். ஆனாலும், நான் இந்தச் செடிகள் மறைவில் இரண்டு மூன்று ரோசாச்செடிகள் வைச்சிருக்கிறேன்” என்றான். இவன் சொல்லிய சொற்களால் வெள்ளைக்காரத் துரைகளின் தன்மையையறிந்து வியப்படைந்தேன். அதன்பின், அவன்காட்டிய அந்த ரோசாச்செடிகளின் அண்டையிற் போனோம். ஒரு செடியில் ஒரே காம்பில் இரண்டு பெரும் பூக்கள் மலர்ந்து நறுமணம் பரப்பின; இரத்தம்போற் கருமை கலந்த சிவப்பும் இ இன்றித் தாமரைபோல் வெளிறின சிவப்புமின்றி நடுத்தரமாய் விளங்கிய அவற்றின் செம்மை நிறமும் மணமும் எங்கள் கண்ணையுங் கருத்தையும் கவர்ந்தன. அவற்றை நாங்கள் நிரம்பிய ஆவலோடு நோக்கி வியந்துபேசுதல்கண்டு அந்தத் தோட்டக் காரன் எங்கள்பால் அன்புடையனாய் அவ்விரண்டு காழுமலர்களையும் பறித்து என் தமையன் கையிற் கொடுக்க, அவன் ஒன்றை எனக்கும் மற்றொன்றைத் தன் மனைவிக்குங் கொடுத்தான். அந்நறுமலரை முகந்தும் அதன் செவ்வொளியைக் கண்ணாற் பருகியும் என் உள்ளம் மிக அமைந்து களிப்பிற்றுளும் பிற்று. பின்னர் அந்தத் தோட்டக்காரனுக்கு நாங்கள் நாலணாக் காடுத்தோம்; அவனும் அதனை முகம் மலர்ந்து ஏற்றுக் கொண்டான். அதன்பிற் சிறிதுநேரம் அங்கே மகிழ்வுடன் இருந்து, அப்பால் அங்கு நின்றும் புறப்பட்டுத் தீவுபோற் சயற்கையாக அமைத்திருக்கும் ஒருசிறு நிலப்பகுதியைச் சூழ்ந்துள்ள உப்பங் கழியருகிற் சென்றோம்.

அவ்வுப்பங்கழியின் கரைஓரத்தில், இலைகள் நெருங்கிக் குளிர் நிழலைத்தரும் ஒருவகையான பலமரங்கள் நெடுகஓங்கி நிற்கின்றன. பருத்தமாங்காயைப் போன்ற பசுங்காய்கள் நடுவே சிறிது அறுப்புடையனவாய் அம்மரங்களிற் கும்பு கும்பாய்த் தொங்கின. அக்காய்களுட்பல அக்கழித்தண்ணீரில் வீழ்ந்து மிதந்தன; பல கரையோரங்களில் வீழ்ந்து காய்ந்தனவும் பச்சையுமாய் இருந்தன. அவற்றுள் இரண்டுமூன்றை நாங்கள் எடுத்து, அவற்றின் பெயரும் பயனும் என்னவென்று அங்கிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/204&oldid=1582191" இலிருந்து மீள்விக்கப்பட்டது