உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் -14

காவற்காரன் ஒருவனைக் கேட்டோம். அவன் கூறியபெயர் உயர்ந்தோர் நடுவில் வழங்கத் தகாததாயிருந்தமையால் அதுகேட்டு நாணம் உற்றோம்; அவை ஒன்றுக்கும் பயன்படா எனவுங் கூறினான். இவ்வளவு ஏராளமாய்க் காய்க்கும் இவை உணவுக்கேனும் மருந்துக்கேனும் பயன் படுமானால் எவ்வளவு நலமாயிருக்குமென்று பேசினோம். கடவுள் படைப்பிற் பயன்படாதது இராது; ஆனால், இக்காயின் பயன் மக்கள் இன்னும் உணரவில்லையென்று பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம்.

ணா

பின்பு அக்கழியின் கரையண்டை தண்ணீரில் நின்ற ஒரு சிறு படகைப்பார்த்து, அஃது எதற்காக அங்குநிற்கின்றதென்று கேட்டேன். அத்தோட்டத்திற்கு வருவோர் விளையாட்டாக க அதில் ஏறி அக்கழியிற் சுற்றி வருவதற்காக அஃது அங்கே நிற்கின்றதென என் தமையன் உரைத்தான். அதன்மேல் அதில் ஏற விரும்பினோம். காவற்காரன் ஆள் ஒன்றுக்கு இரண்ட வாடகை கொடுக்க வேண்டுமென்று கேட்டான். அங்ஙனமே எட்ட ணாக்கொடுத்து நாங்கள் நால்வரும் அதில் ஏறிக் கொண்டோம். என் தமையன் அதின் நடுவேயிருந்து கொண்டு அப்படகின் துடுப்பு இரண்டை எடுத்து அதன் இருபுறத்து வளையங்களிலும் மாட்டி வலித்தான். யானும் அவன் மனைவியும் அவனுக்கு எதிரில் உட்கார்ந்தோம். அத்தையார் அவனுக்குப் பின்னேயுள்ள இடத்தில் இருந்தார்கள். அவன் வலிக்கவலிக்க அது தண்ணீரின்மேற் சறுகியோடிற்று. அதன் ட்டம் எங்களுக்கு நிறைந்த மனக்கிளர்ச்சியைத் தந்தது. அக்கழியின் குறுக்கே மேற்கவிந்துள்ள பாலத்தின்கீழே வந்து, அதன் கண்கள் ஒன்றின்ஊடே எங்கள் படகு செல்லும்போது கு எனக்குப் பின்னும் மகிழ்ச்சிமிகுந்தது. அக்கழியின் நடுவேயுள்ள திட்டில் பெரியதொரு கூண்டினுள்ளே அடைக்கப்பட்டிருந்த பல வகைப் பறவைகளுங் கீச்சிடும் ஒலி கேட்டு அம்முகமாய்ப் பார்த்தோம். அத்திட்டில் பலவகைக் குரங்குகள் தறிகளிற் சங்கிலியாற் பிணிக்கப்பட்டு அவற்றைச் சூழவருதலும் அவற்றின் மேல் ஏறியிருத்தலுந் தோன்றின. இக்குரங்குகளையும் அப்பறவை இனங்களையுந் தமது மனப்போக்கின்படி விட்டிருந்தால் அவை எவ்வளவு களிப்பாயுஞ் சுருசுருப்பாயும் உலவும்! மக்கள் பார்க்கும் பொருட்டாக இவை இங்ஙனம் சிறைப்படுத்தப்பட்டு மனம் மடிந்திருக்கின்றனவேயென்று இரக்கமுற்றுப் பேசினோம். இவ்வாறு நாங்கள் அத்திட்டைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/205&oldid=1582199" இலிருந்து மீள்விக்கப்பட்டது