உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

177

சுற்றிவருகையில் அதன் சரிவில் தண்ணீர் ஓரமாய் நின்று கொண்டிருந்த இரண்டு மூன்று கூழைக் கடாப் பறவைகள் எம் கருத்தை இழுத்தன. அவற்றின் நீண்டவலிய அலகுகளும், கீழ் அலகின்கீழே நிகளமாய்த் தொங்கும் அவற்றின் தோற்பைகளும் பார்க்கப்பார்க்கப் புதுமையாய் இருந்தன. இவ்வாறாக இவைகளைப் பார்த்துக் கொண்டே அப்படகில் மகிழ்ச்சி யோடு சுற்றிவந்து ஏறின இடத்திற் சேர்ந்து கீழே இறங்கினோம்.

இதற்குட் பகலவனுங் கீழ்பால் வட்டத்தினின்று மேலெழுந்து விட்டான். அவனது கதிரொளியானது அங்குள்ள மரங்களின் ஊடே ஊடே புகுந்து காணப்படுவதாயிற்று. அப்போது ஏழு மணியிருக்கும். எல்லாரும் வீட்டுக்குச் செல்ல வந்தவழியே திரும்பி நடந்தோம். பல துறைகளிற் சென்று பல தொழின் முயற்சிகளைச் செய்வோருந் தத்தம் அலுவல்மேற் போதலைப் பார்த்துக் கொண்டே வீடுவந்து சேர்ந்தோம். என் தமையன் பத்துமணிக்கெல்லாம் அலுவலுக்குப் போகவேண்டு மாதலால்,நாங்கள் காலைக்கடன்களை முடித்துச் சிவபெருமாற்கு வழிபாடியற்றிச் சமையற்றொழிலிற் புகுந்தோம். சென்ற ஒருதிங்களாக யான் விடாப் பிடியாய்ப் பழக்கிவருதலால், என் தமையன் மனைவி கனகவல்லி வீட்டு வேலைகளைச் சுருசுருப்பாகவும் திறமாகவுஞ் செய்யக் கற்றுக் கொண்டாள். சமையல் செய்வதிலுந் தேர்ந்துவிட்டாள். இப்போது அவள் முன்னையிலும் பார்க்க அழகாயிருக்கின்றாள். அவள் உடம்பிற் சதையுந் திரண்டு உருண்டு அரைத்துப்பூசினாற் போல் எங்கும் ஒருபடியாய் இறுகி வளர்ந்து வருகின்றது. இப்போது அவள் கன்னங்கள் வெளிறுமாறித் தாமரைப்பூவின் இதழ்போற் செம்மைநிறம் ஏறிப் பளபளப்பாய்த் திகழுகின்றன. எனக்கு இவளைப்பற்றிய கவலையும் நீங்கிற்று. தமிழ்மொழியைக் நீங்கிற்று.தமிழ்மொழியைக் கற்பதிலும் இவளுக்கு இப்போது ஆவல் உண்டாயிருப்பதால், இனிமேல் என் தமையன் இவளுக்குத் தமிழ் நூல்களைச் செவ்வையாகக் கற்பிக்கக்கூடும். எந்நேரமும் இவள் தெலுங்குப் பாட்டுகளைப் பாடும் பழக்கமும் ஓய்ந்துவருகின்றது.என்னோடு கூட ச் சேர்ந்து தேவார திருவாசகச் செந்தமிழ்த் தெய்வப் பாடல்களை வீணையில் விருப்பத்தோடு பாடிவருகின்றாள். இவள் இங்ஙனம் நல்ல மாறுதல் அடைந்து வருவதைப் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/206&oldid=1582208" இலிருந்து மீள்விக்கப்பட்டது