உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 என்

தமையனும்

வருகின்றார்கள்.

மறைமலையம் -14

அவள் அன்னையும் மிகமகிழ்ந்து

உணவுகொண்டு

சமையல் முடிந்து என் தமையன் அலுவலுக்குப் போயினான். நாங்களும் உணவுகொண்டோம். அத்தையார் சிறிது அயர்வு தீரப் படுக்கச்சென்றார். கனகவல்லி 'நளவெண்பாப்' படிக்க உட்கார்ந்தாள். யானும் அவளுக்குப் பாடங் கற்பிக்கும் பொருட்டுக் கீழ் மாடத்திலேயே அவளோடு கூட இருந்தேன். யான் சொல்லிக் கொடுத்தவைகளைக் கேட்டுக் கொண்டு அவள் படிக்கும்போது, இடைக்கிடையே யான் நேற்றிரவு கண்ட கனவின் தோற்றமும் இன்று காலையிற் குடிமக்கள் தோட்டத்தில் உலவி வந்தமையும் என்னையறியாமலே என்னுள்ளத்தில் கலந்து வந்து தோன்றின. மணி பதினொன்றே முக்கால் ஆயிற்று. தபாற்காரன் வந்து கதவைத் தட்டினான். அவ்வொலி கேட்டதும் என் உள்ளம் தாவிக்குதித்தது. எனக்கு முன் கனகவல்லி ஓடிக் கதவைத்திறந்து இரண்டு கடிதங்களை வாங்கிக் கொண்டுவந்து என்கையிற் கொடுத்தாள். ஒன்று எனக்கும் மற்றொன்று என் தமையனுக்குமாக எழுதப் பட்டிருந்தன. அவ்விரண்டின் மேல்விலாசக் கையெழுத்தும் அந்தப் பாரசிகப் பெருமான் கையெழுத்தாய் இருந்தமையால் என் கடிதத்தைப் பிரித்துப்பார்க்க எனக்குண்டான ஆவலும் மனத்துடிப்பும் இவ்வளவென்று எழுதல் இயலாது. ஆனாலுங் கனகவல்லிக்கும் அவள் அன்னைக்கும் அந்தப் பாரசிகப் பெருமான் எழுதுங் கடிதங்களில் உள்ளவை தெரியலாகாது என்பது என்தமையன் கருத்து எவ்வளவு நல்லவர்களும் இரக்கமுள்ளவர்களு மாயிருந்தாலும் வழக்கமாய் நடந்து வருவதற்கு மாறான தொன்றைக் கண்டால் அவர்கள் உடனே அதனிடத்து வெறுப்புக்கொள்வது இயற்கையா யிருக்கின்றது. அதனால், அவைகளைத் தெரியாமல் வைப்பது எனக்கும் அதனால், அவரவர்க்கு வருங் கடிதங்களில் உள்ள செய்திகளை அவர்களே தெரிவித்தால் அல்லாமல், மற்றவர்கள் அவற்றைப் பற்றிச் சிறிதுங் கேட்கலாகா தென்று என் தமையன் வரையறுப்பாய்த் திட்டம் பண்ணியிருந் தமையால் அக்கடிதங்கள் இரண்டையும்பற்றிக் கனகவல்லி ஏதுமே கேட்கவில்லை. இந்த ஏற்பாட்டினால், வீணான கேள்விகளும், அவற்றிற்கு விடை சொல்லவேண்டுந் துன்பமும்

சைவாகவேயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/207&oldid=1582216" இலிருந்து மீள்விக்கப்பட்டது