உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

179

இல்லா தொழிந்தன. கனகவல்லி அவற்றைப் பற்றிக் கேளா விட்டாலும் அவள் உள்ளத்தில் அவற்றை அறிய ஆவலிருக்கும் என்பதனாற் சுருக்கமாக ‘அம்மா கனகவல்லி இந்தக்கடிதம் தம் அண்ணாவுக்கு வந்தது; இஃது எனக்கு வந்தது. என் மாமனார் அகத்தில் இருக்கையில் ஒர் அம்மா எனக்கு நேசம் ஆனார்கள். அவர்கள் இப்போது ஊருக்குப் போய் இருக்கிறார்கள். அவர்கள் அங்கேயிருந்து எழுதியிருக்கிறார்கள்’ என்று தாராளமாகச் சொன்னேன். அதற்கு அவள் “மச்சி, மேல்விலாசக் கையெழுத்து இரண்டிலும் ஒரே மாதிரியாய் இருக்கிறாப்போல் தோன்றுதே” என்று சற்றுப் பராமுக மாய் வினாவுவது போற் கேட்டாள். உடனே நான் ஐயுறவுக்கு இடம் இல்லாதபடி “ஆம், அம்மா, அந்த அம்மாவின் கணவர் அண்ணாவுக்கு மிகநேசமாயுள்ளவர்; அண்ணாவுக்கு அவர் நெருங்கிய நேசமாகவே, அந்த அம்மா அவர்கள் எனக்கு நேசம் ஆகும் படி நேர்ந்தது. அந்த அம்மா தமிழ் நன்றாய்ப் படித்தவர்கள். ஆனால், இங்கிலீஷ் தெரியாது, அதனாலேதான் இங்கிலீஷ் கற்ற அவர்களின் கணவனார் மேல்விலாசம் இங்கிலீஷில் எழுதியிருக்கிறார்” என்றேன். அதன்மேல் அவள் களங்கம் இல்லாமலே. "அந்த அம்மா அவர்கள் தமிழிலேயே மேல் விலாசம் எழுதலாமே?" என்று வினாவினாள். "இல்லை, அவர்கள் வியாபாரத்தின் பொருட்டுத் தமிழ் தெரியாத வடநாட்டுப் பக்கம் போயிருக்கிறார்கள். அதனாலேதான் அங்கேயுள்ள தபாற்சாலைக்காரருக்குத் தெரியும்படி ஆங்கிலத்தில் விலாசம் எழுதியிருக்கிறார்கள் என்றேன்.

இவ்விடையை அவள் ஒப்புக்கொண்டவளாகி அதற்கு மேல் ஒன்றுங்கேளாமல் இருந்துவிட்டாள். என்றாலும் அவள் வ்வளவு கூடக் கேட்டதும் அவற்றிற்கெல்லாம் நான் விடை சொல்ல வேண்டி நேர்ந்ததும் எனக்குப் பெருஞ் சல்லையாய் ருந்தன. இதற்கே இத்தனை துன்பமானால், இதற்குமேல் அக்கடிதங்களில் உள்ள செய்திகளையும், அச்செய்திகளின்மேல் வரும் வரலாறு களையும் வினாவப் புகுந்தால் அவற்றிற்கெல்லாம் விடை டை சொல்வதும், அவைகளைச் சொல்லி ஒப்புக்கொள்ளும் படிசெய்வதும் எவ்வளவு வருத்தத்திற்குங் காலக்கழிவிற்கும் வீண் பழிப்பிற்கும் இடஞ்செய்யும்! இவ்வளவு தொல்லைப்பட்டுங் கேட்பார்க்குஞ் சொல்வார்க்கும் ஏதேனும் அதனாற் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/208&oldid=1582224" இலிருந்து மீள்விக்கப்பட்டது