உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் -14

உண்டா என்றால் அதனையும் காணோம். சொல்லுவார் மறைவுகளை அறிதலாற் கேட்பார் அவரைத் தாழ்வாக நினைத்து வரவர அவர் பால்வைத்த அன்பும் நேசமுங் கெடப்பெறுவர்; சொல்வாருந் தம்மறைவுகளை அவர் கேட்டுத் தெரிந்தமையால் அவர்மேல் வருத்தங்கொள்வதோடு, அவரைக் காணுவதற்குங் கூசுவர். எல்லாருங் குற்றம் உடையவராயினுந், தம் குற்றத்தைக் குற்றமாக நினையாமற் பிறர் குற்றத்தையே பெரிதாக நினைப்பர். தினையளவு குற்றத்தையும் பனையளவாக்கி வெறுப்படைவர். பிறரிடத்திற் குற்றம்போற் காணப்படுவது ஆராய்ந்து பார்க்குங்காற் குற்றமாக முடியாதாயினுந், தாம் அதனைக் குற்றமாக நினைத்துவிட்டாற் பிறகு அதனை நலம் உடையதாக எண்ண உடன்படாமை மக்களுக்கு இயற்கையாகவே இருக்கின்றது. இவ்வியல்புகளை ஆழமாக நினைத்துப் பார்க்கையில், உலகத்தில் அன்பு நேசம் உறவு உதவி துணை என்பன அமைந்த வாழ்க்கையும் இன்பமும் நிலவ வேண்டு மானால், ஒருவர் மற்றொருவர் மறைவுகளை அறிதலில் வீண் முயற்சியும் வீண் ஆவலுங் கொள்ளுதல் கூடாது. இந்த உயர்ந்த உண்மையை உணர்ந்து என் தமையன் செய்த ஏற்பாடு எவ்வளவோ சிறந்ததாயிருக்கின்றது. என் தமையன் தங்களைப் போல் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றதும் அத்தேர்ச்சி யினால் ஆங்கில மக்களிடத்தில் உள்ள இத்தகைய உயர்ந்த வழக்க ஒழுக்கங்களைப் பின்பற்றி நடப்பதும் எவ்வளவோ நலம் பயப்பன வாயிருக்கின்றன! ஆங்கில மக்களிடத்துள்ள இன்னோரன்ன விழுமியபழக்க வொழுக்கங்களை கைப்பற்றாமல் அவர்களிடத் துள்ள சில குறைவான செயல்களையும் ஊண் உடைகளையும் விடாப் பிடியாகக் கைக்கொண்டு நடக்கும் நம் நாட்டவர் சிலர் பலரின் நடக்கையானது எவ்வளவு தீங்கினைத் தருவதும் வருந்தத் தகுவதுமாயிருக்கின்றன! அது நிற்க.

பின்பு கனகவல்லிக்கு நளவெண்பாவிற் சுயம்வர காண்டத்திற் சில செய்யுட்களுக்குப் பொருள் விளக்கிச் சொல்லியவுடன் அவள் தன் பழம்பாடங்களைத் திருப்பிப் படிக்கும்படி கற்பித்துவிட்டு, வழக்கப்படி என் பாடங்களைக் கற்கப்போவது போல் மேன் மெத்தைமேல் ஏறி யான் படிக்கும் அறையில் வந்தேன். தலைமேல் ஏற்றிய ஒருபெருஞ் சுமையைக் கீழ் இறக்கிவைக்க இடம் பெற்றவளைப் போல் யான் ஆறுதல் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/209&oldid=1582233" இலிருந்து மீள்விக்கப்பட்டது