உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் -14

புதையலும் ஒன்றேயாம். நிலத்திலிருக்கும் புதையலாயினும் எப்போதேனும் ஒருகாற் பிறர் கையில் அகப்படும் என எண்ணுதற்கு இடம் உண்டு; ஆனாற், கையிறுக்கம் உடைய வர்கள் கைப்பொருளோ ஒரு காலத்தும் எவர்க்கும் பயன்படுவதில்லை. ஆதலால், அந்தப்பாரசிகப் பெருமானுக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தருளிய இறைவன் அருட்டிறத்தை வியந்து நாம் வாயாரவாழ்த்தக் கடமைப்பட்டிருக் கின்றோம். அந்தப் பாரசிகப் பெருமானுக்கு இங்ஙனம் ஏராளமான செல்வம் வருவதைப் பற்றி அவருக்குத் தாயக்காரரா யுள்ளவர்கள் பெருங் கலகஞ்செய்து, அச்சொத்தை தாம் கவர்ந்துகொள்ளும் பொருட்டு நிரம்ப முயற்சி செய்தார்களாம். ஆனால், அவர்களை அமைதிப்படுத்தும்பொருட்டு அந்தப் பருமான் செய்த ஏற்பாடுகள் மிகவும் புகழற்பாலனவா யிருக்கின்றன. கல்வியிலுஞ் செய்கையிலும் உலக முறைகளிலும் பெரிதுஞ் சிறந்த தக்கோர் சிலரை நடு நிலையாளராக வைத்து அவர்களைக் கொண்டே அத்தாயத்தாரை எல்லாம் ஒரு பொதுவிடத்தில் வருவித்துவைத்துக் கல்விக்குங்கைத் தொழில் வளர்ச்சிக்கும் ஏழை எளியவர்கள் பிழைப்புக்கும் பயன்படும் பொருட்டுப் பலவகை அறங்களுக்கும் உதவி புரிவதனால் தம் தமையனார் சொத்து அவ்வளவையும் அத்தாயத்தார்க்கே காடுத்து விடுவதாகவும், அல்லது அதற்கு உடன்படா விட்டால் அச் சொத்து முழுமையும் அப்பாரசிகப் பெருமான் தாமே பலவகை அறங்களுக்குங் கொடுக்க முன்வந்திருப்ப தாகவும் உருக்கத்தோடு கூறினாராம். அதன்மேல் நடுநிலை யாளராய் ஏற்படுத்தப் பட்டவர்கள், "தம் தமையனார் சொத்து முழுமையும் இந்தக் கனவானே பெறுதற்குச் சட்டப்படி உரிமை உள்ளவர். இதிற் சிறிதும் உரியமையில்லாத நீங்கள் வீணாக வழக்குத்தொடுப்பதிற் பயனில்லை. இப்போது இவர் சொல்லுகிறபடி நீங்கள் பலவகை அறங்களுக்கும் பயன்படுத்து வதானால், இச்சொத்தெல்லாம் அவற்றிற்குத் தருவதாகச் சொல்லுகிறார். அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று தாயத்ததாரைக் கேட்க, அவர்களிற் சிலர் அறமே செய்து அறியாமையின் சும்மா இருந்தார் களாம். மற்றுஞ் சிலர் ஏழைகட்கு உணவுகொடுக்கும் ஓர் அறச்சாலைக்குங், கல்விக் கழகத்திற்கும், ஆநிரைகளைக்காக்கும் ஒரு விடுதிக்கும் லட்சரூபா உதவும்படி சொல்ல, உடனே நம் பாரசிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/211&oldid=1582250" இலிருந்து மீள்விக்கப்பட்டது