உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

183

பெருமானவர்கள் அத் தொகையை அம்மூன்றற்கும் பகுத்துக் காடுத்து, அங்ஙனத் தம்மை அறஞ்செய்யும்படி ஏவிய அவர்கட்குந் தம் நன்றியையும் வணக்கத்தையுஞ் செலுத்தித் தாம் இன்னுஞ் செய்யவேண்டிய அறங்களையும் எடுத்துச் சொல்லும்படி வற்புறுத்திக் கேட்க, அத்தாயத்தார் அவர் தம் பெருந்தன்மையையுஞ் செயற்கரிய செய்கையையும் பார்த்து வியந்து நெஞ்சம் இளகினவர்களாய் மனந் திருந்தி, "இந்தப் பெருந்தகையினிடத்திலேயே, அவ்வளவு பொருளும் இருக்கட்டும்; எங்களுக்கு ஒரு காசளவும் வேண்டாம்; நாங்கள் இவரது உயர்ந்ததன்மையை அறியாமற் பிழைசெய்தோம்” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சென்றார்களாம். நடுவு நின்றோர்களும் அவரது உயர்ந்த தன்மையையும் அதற்கேற்ற செயலையும் கண்டு வியந்து வாழ்த்தினார்களாம். இவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து ஓர் ஒழுங்குக்குக்கொண்டுவர இத்தனை நாட்கள் சென்றனவாகவும், அதனாற் கடிதம் எழுதக் காலந்தாழ்த்துதற்குப் பெரிதும் வருந்துவதாகவும் அந்த அம்மை யாரவர்கள் எழுதியருக்கிறார்கள்.

இனி என்னை அழைத்துக்கொண்டு பம்பாய்க்கு வர வேண் டி ய ஏற்பாட்டைப் பற்றித் தம் கணவராகிய அந்தப் பாரசிகப் பெருமான் என் தமையனுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதைப் பற்றியும், அங்ஙனமே எல்லாம் விரிவாக எழுதிய மற்றொரு கடிதத்தை அவர் தங்கட்கு அனுப்பி யிருப்பதைப் பற்றியும் அந்த அம்மையாரவர்கள் எனக்குக் குறிப்பிட்டிருத்தலால் அதனைக் கண்டு மகிழ்வுற்றேன்.

இன்று சாய்ங்காலம் என் தமையன் அலுவலிலிருந்து வீட்டுக்கு வந்ததும், அவனுக்கு வந்த கடிதத்தை அவன்கையிற் கொடுத்தேன். அவன் மேன்மெத்தைமேற்சென்று அதிலுள்ள வைகளைப் படித்தபின், என்னை அருகழைத்து அதில் உள்ளவை களையெல்லாம் எனக்கு மகிழ்வோடு எடுத்துச் சொல்லிக் “கோகிலா, நாம் எப்போது பம்பாய்க்குப் புறப்படலாம்?” என்று என்னை வினாவினான். அதற்கு நான் நாணமும் மகிழ்வுங்கலந்து தோன்றப் பெற்றேனாய்ச் சிறிது சும்மா இருந்து, பிறகு "அண்ணா, நீ எப்போது அங்கே செல்ல ஏற்பாடு செய்கின்றாயோ அப்போது புறப்படலாம்” என்றேன். “நல்லது, அத்தையார் இரண்டுநாள் இங்கே தங்கியிருக்க லானதும் நன்மையாகத்தான் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/212&oldid=1582258" இலிருந்து மீள்விக்கப்பட்டது