உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் -14

கனகவல்லியையும் பாட்டியையும் அத்தையாரோடு நாளைக்கு அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிடலாம் என்று எண்ணுகிறேன். நாளை நீக்கி நாம் பம்பாய்க்குப் புறப்படலாம். நான் இரண்டு வாரத்திற்கு விடுதி பெற்றுக் கொள்ளுகிறேன். நீ மற்றவைகளை யெல்லாம் ஒழுங்கு படுத்து. 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்று பழமொழிப்படி எல்லாம் ஒத்துவரும் போதே உனது காரியத்தை முடித்துவிட எண்ணுகிறேன். ஏனென்றால் நந் தந்தையார் மிகவுங் கொடியவராய் இருக்கின்றார். உனக்கும் எனக்கும் ஏதேதோ கெடுதிசெய்ய அவர் மிகவும் பரபரப்பா யிருக்கிறாரென்று அறிகின்றேன். அவர் இப்போது இங்கில்லை யாம். உன் மாமியாகிய கொடியவளும் நம் தந்தை யாரும் ஒன்று சேர்ந்து எங்கோயோ வெளியூர்க்குச் சென்றிருக் கின்றார்களாம். எவனோ சேதுராமன் என்பவனிடமிருந்து நம் தந்தையார்க்கு அடிக்கடி கடிதம் வருகின்றதாம்” என்று அவன் கூறுகையில்,

6

66

"ஐயோ! சேதுராமனா! நான் முதலிலிருந்தே அவனைப் பற்றி ஐயுறவுகொண்டது உண்மையாய் வருகின்றதே!” என்று பேரச்சத்தோடு கூறினேன்.

66

ஓ! உனக்கு அவனைப்பற்றி எப்படித் தெரியும்?” என்று தமையன் வியப்புடன் வினாவினான்.

"தெய்வநாயகத்தினிடம் அவன் நேசம்பாராட்டிச் சிலகாலம் வந்து கொண்டிருந்ததாகவும், பிறகு அவன் நடக்கை தமக்குப் பிடியாமையால் அவனைத் தம்மிடம் வராமற்செய்து கொண்ட தாகவும் தெய்வநாயகம் ஒரு திங்களுக்கு முன் எழுதி யிருந்தார். அஃதிருக்கட்டும். அவனைப்பற்றியுந் தந்தையார்க்கு அவன் கடிதம் எழுதுவது முதலான செயல்களைப் பற்றியும் உனக்கு எப்படித் தெரியும்?" என்று வினாவினேன்.

"நேற்றுத் தற்செயலாக உன் மைத்துனனைப் பார்த்தேன். அவன் தாயினிடத்துள்ள கெட்டகுணங்கள் அவனிடம் இல்லை; காலஞ்சென்ற மாமாவினிடத்துள்ள நல்ல குணங்களிற் சில அவனிடம் அமைந்திருக்கின்றன. அவன் தன் அளவிற்கு இருபதினாயிரம் ரூபாய் கிடைத்ததே போதுமென்று மன நிறைந்து இருப்பதோடு, நம் மிருவர்க்கும் மாமா எண்பதினாயிர ரூபா எழுதிவைத்ததைப் பற்றிப் பொறாமையாவது மனவருத்த மாவது அவன் கொள்வதாக ஒன்றுந் தெரியவில்லை. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/213&oldid=1582266" இலிருந்து மீள்விக்கப்பட்டது