உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

185

நம்மிருவரிடமிருந்து சிறிது பொருள் உதவியை எதிர்பார்க்கிறான். மாமா அவர்களின் சாவுக்கு அவன் தாயுந்தமக்கையுங் காரணமாயிருந்ததை நினைத்து நினைத்து வருந்துகின்றான். இதனாலும், உன்னைத் தன் வீட்டிலிருந்து அவர்கள் போகும்படி கட்டாயப் படுத்தினாலும் நம் தந்தையாரோடு அவ்விருவரும் அவனுக்குத் தெரியாமல் மறைவாகப் பல செய்திகளை அடிக்கடி கூடிப்பேசி வருவதாலும் அவர்களிடத்தில் அளவிறந்த வெறுப்புக் கொண்டவனாய் இருக்கிறான். இவன் இந்நிலையிலிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தேனாய், அவன் வீட்டுச் செய்திகளை யான் பராமுகமாய் வினவி வருகையில் அந்தச் சேதுராமன் என்பனைப் பற்றியும் இப்போது அவன் அன்னையும் நந்தந்தையும் ஒன்று சேர்ந்து வெளியே எந்த ஊர்க்கோ போயிருப்பதைப் பற்றியும் அவனே எடுத்துச் சொன்னான். அவர்கள் மிகவு மறைவாய்க் கூடிப் பேசுதலால், இவ்வளவுக்குமேல் அவர்கள் இன்னது செய்கிறார்கள் என்பது புலப்படவில்லை யென்றுங் காலில்லாமற் சொன்னான். அவன் சொல்லியமட்டிலிருந்து அவர்கள் நமக்கு ஏதோ ஒரு பெருந் தீங்குசெய்ய முயன்றுவருகிறார்கள் என்பது தெரிகின்றது” என்று சொன்னான்.

து.

அச்செய்தியைக் கேட்டு என் மனம் மிகமருண்ட ஆனாலுந் தீயோர் செய்யுந் தீமைகளை இறைவனே விலக்க வேண்டுமல்லாமல் நம்மாற் செய்யக்கூடியது ஒன்றும் இல்லாமையை அறிந்தும் பம்பாய்க்கு நாளைக்கழித்துப் புறப்பட வேண்டியிருப்பதை நினைந்தும் ஆறுதல் பெற்றுக் கிளர்ச்சி யுற்றேன். பிறகு தங்களுக்கும் அந்தப் பாரசிக கனவானுக்கும் எங்கள் வருகையைப்பற்றிக் கடிதங்கள் எழுத என் தமையன் மேசையண்டை உட்கார்ந்தான். யானும் இக்கடிதத்தைத் தங்கட்கும் மற்றொரு கடிதத்தை அந்தப் பாரசிகப் பெருமாட்டி யாருக்கும் எழுத என் மேசயண்டை உட்கார்ந்தேன். நாங்கள் புறப்படும்போது தந்தியும் அனுப்புவோம். வாடிச்சந்திப்பில் யாங்கன் தங்களைக்காணும் பெரும்பேற்றைத் தாங்கள் ஏழையேன்மீது மனம் இரங்கித் தருதல்வேண்டும. தங்கள் திருமுகத்தை விரைவிற் காணலாம் என்னும் பேரவாவால் என் மனம் உள்நிறைந்து புடைத்திருக்கின்றது. பெறற்கரும் பெரும் பேற்றைத் தந்தருளும் என் தெய்வமே, தங்களை வழியிலேகண்டு சென்றால் மட்டும் என்னுயிர் என்னுடம்பில் நிலைக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/214&oldid=1582274" இலிருந்து மீள்விக்கப்பட்டது