உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் -14

தங்களுக்காக வன்றோ இந்த ஏழை உயிர்தாங்கியிருக்கின்றாள்! இல்லாவிடில் இந்த உயிர்வாழ்க்கை எனக்கு எனக்கு எதுக்காக! எந்தவேலை எப்படியிருந்தாலும் அதனைச் சிறிதுகாலம் நிறுத்திவைத்து, எங்கள் வண்டிவரும் நேரத்தில் தாங்கள் தவறாமல் வாடிச் சந்திப்பில் வந்திருக்கும்படி தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன். நாங்கள் பம்பாய் போய்ச் சேர்ந்தபிறகு நமது மணத்திற்கு வேண்டும் ஏற்பாடுகளெல்லாம் செய்தவுடனே தங்களைப் பம்பாய்க்கு வருவிப்பதாக எழுதியிருக்கிறார்கள். இனி, யான் பம்பாய் சேர்ந்த பிறகுதான் தங்கட்குக் கடிதம் எழுத இடம்பெறுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/215&oldid=1582282" இலிருந்து மீள்விக்கப்பட்டது