உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

கடிதம் - 16

சன்னையிலிருந்து

என் ஆரூயிர்ப் பெருமானே! இன்னதென்று உரைக்க முடியாத திகில்நிறைந்த கனவுகண்டு, அக்கனவினின்றும் விழித்து எழாமல் அதிலேயே அகப்பட்டு வருந்திப் புலம்பும் ஒருத்தியைப் போல் நினைவு கலங்கிய நிலைமையில் இக்கடிதத்தைத் தங்கட்கு எழுதுந் தீவினை உடையளானேன். ஒருவாரத்திற்கு முன் யான் எழுதிய கடிதத்தில் யான் கண்ட ஒரு நடுக்கமான கனவைப்பற்றி தங்கட்கு எழுதியிருந்தேன். அக்கனவிற் கண்ட படியே பெரும்பாலும் எல்லாம் நடந்தது. யான் கள்வர் கையிலகப்பட்டு நேற்று இரவுதான் அவர்களிடமிருந்து மீண்டு, இன்றைக் காலையில் பம்பாயிலுள்ள அந்தப் பாரசிகப் பெருமாட்டியார் வீட்டில் வந்து சேர்ந்தேன். அந்தப் பாரசிகப் பெருமானும் என் தமையனும் அந்தக் கள்வரிடத்திலேதான் இன்னுஞ் சிறையிலே இருக்கிறார்களென்னும் நடுக்கமான செய்தியை உடைந்த மனத்தோடும் ஒழுகுங் கண்ணீரோடுந் தங்களுக்கு எழுதுகின்றேன். அந்தப் பாரசிகப் பெருமாட்டியார் தம் அருமைக் கணவரைப் பிரிந்து ஊண் உறக்கமின்றி உயிர்விடும் நிலையிலிருந்தவர் இன்றைக் காலையில் என்னைக்கண்டவுடனே தங்கணவனார் உயிரோடிருப் பதைத் தெரிந்து போனவுயிர் மீண்டு வரப்பெற்றார்போல் துள்ளி யெழுந்து, என்னை யணைத்துப் பலகால் முத்தமிட்டு, எனக்கு வேண்டிய வசதிகள ளெல்லாஞ் செய்யும்படி தம் ஏவலாட்களுக்குக் கற்பித்துவிட்டுத், தங்கணவரையும் என் தமையனையும் மீட்டுக் கொண்டுவரும் பொருட்டாகத் தம் உறவினரான ஆண்மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு ஊர் காவற் சாவடிக்குப்போய், அங்குள்ள அதிகாரிகளோடு என்னையும் அழைத்துக்கொண்டு, அவ்விரு வருஞ் சிறையிருக்கும் இடந்தேடிப் புறப்படவேண்டும் ஏற்பாடு களெல்லாம் செய்துகொண்டு, ஒரு மணி நேரத்திற்குமுன் தான் வீட்டுக்குத் திரும்பி வந்தார். வந்தபிறகுதான் சிறிது உணவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/216&oldid=1582291" இலிருந்து மீள்விக்கப்பட்டது