உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் -14

கொண்டார். அவர் நெஞ்சம் பதைக்கின்றது! ஓயாமற் பெருமூச் செறிகின்றார்! கண்ணீர் ஆறாய்ப் பெருக்குகின்றார்! எம் பெருமானுக்கு இதற்குள் யாது நேர்ந்ததோ! என்கிறார். ஐயோ! இத்தகைய துயரத்தை என் வாழ்நாளில் இதற்குமுன் யான் கண்டதே இல்லை! இத்தனை துன்பமும் இவர்கட்கு என் ஒருத்தியால் நேர்ந்ததன்றோ!" என எண்ணி எண்ணி என் நஞ்சம் ஏங்கியது! அந்த அம்மையார் தங்குழந்தைகளை யெல்லாம் பார்த்துப் பார்த்து தவிக்கின்றார்! அக்குழந்தைகளிற் கைக்குழவியுங் கூட இந்நிகழ்ச்சிகள் ஒன்றும் அறியாதாயினும் வாடி வதங்கிப் போயிற்று! அறிவு தெரிந்த மற்றப் பிள்ளைகளும் பெரியபெண்ணும் இடைக்கிடையே ஓவென்று அலறுகிறார்கள்! தந் தந்தையாரை நினைத்துந் தம் அன்னையின் துயரத்தைக் கண்டும் விம்மி விம்மி அழுகின்றார்கள்! என் செய்வேன் பாவியேன்! இந்தப் பெருந்துயரான நிலைமையில் எல்லா இரக்கமும் உடைய சிவபெருமானே எங்கட்கு உதவிபுரிதல் வேண்டும். யானும் அவர்களோடு நீள மனம் நைந்து வருந்திய பிறகு, அவ்வருத்தந்தீர்ந்து என்னை அறியாமலே ஒரு பெருங் கிளர்ச்சி கொள்ளப் பெற்றேன்.அங்ஙனங்கிளர்ச்சி கொண்டதும் அந்த அம்மையாரை நோக்கி “என் அம்மா, இவ்வளவுதுயரம் அடையவேண்டாமென்று தங்களைக் கெஞ்சிக் கேட்டுக் காள்ளுகிறேன். கொடுங்கள்வர் கையில் அகப்பட்ட ஏழைச் சிறுமியாகிய என்னை அவர்களிடத் தினின்று தப்புவித்துக் காடுகளும் மலைகளுந் தாண்டித் தங்களிடம் வந்து சேரும்படி உதவிபுரிந்த பேர் இரக்கமுடைய கடவுள் நம் ஐயா அவர்களையும் என் தமையனையும் அங்ஙனமே விரைவில் மீளச்செய்து நம்மிடஞ் சேர்ப்பிப்பாரென்னும் நம்பிக்கை என்னுள்ளத்தில் நிரம்பவும் வலிவேறித் தோன்றுகின்றது. இன்றிரவே சேவகருடன் நாம் சென்று அவர்கள் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் இடந்தேடி இருவரையும் மீட்டுக்கொள்வ தோடு அக்கொடுங் கள்வர்களையும் பிடித்துக்கொண்டுவந்து சிறையில் அடைக்கும்படி நம் இறைவன் உதவிபுரிவார். இந்த நேரத்தில் பெரிய மனவலியும் மனத்துணிவுந் தான் வேண்டும். அன்பும் அருளுங் குடிகொண்ட தங்களிருவர்க்கும்; என் தமையனுக்கும் ஏதோர் இடுக்கணும் நேராது; நல்லோரைக் கடவுள் கைவிட மாட்டார். அப்படிக் கைவிட்டால் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்னும் நம்பிக்கை உலகத்தில் இல்லாமலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/217&oldid=1582299" இலிருந்து மீள்விக்கப்பட்டது