உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

189

போயிருக்கும். தீமையே அரசாளும். ஆனால், அப்படியில்லை. தீமையின் வலிவைக் குறைக்கும் வழி வகைகள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. உற்றநேரத்தில் அன்புமிக்க நல்லோர்க்கு இறைவன் அருள் புரிந்து வருகிறார் என்னும் நம்பிக்கை அறிவுவளர்ச்சியோடு கூடி வலுவடைந்து வருகின்றது. அதற்கு ஒன்றுக்கும் பற்றாத ஏழையேன் இப்போது தப்பிவந்தமையே ஒருசான்று. ஆகையால், இன்னுஞ் சில மணி நேரத்தில் நாம் புறப்படுதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்" என்றேன். ஏழையேன் கூறிய புன்சொற்களைக் கேட்டு ஒருவாறு L மனந்தேறிய அம்மையார் என்னையணைத்து முத்தமிட்டு நாங்கள் இன்று இரவு புறப்படுவதற்கு வேண்டும். ஏற்பாடு களெல்லாம் செய்யப்போனார். பன்னிரண்டு சேவர்களும் நுண்ணறிவுமிக்க ஓர் அதிகாரியும் எங்களுடன் வருவதற்குத் தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த அம்மையாரும் யானும் அவர்களுடன் போய்த் திரும்பும் வரையில் பெண்ணுடுப்புகளைக் களைந்து ஆண்உடுப்பிலிருக்கும் படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.எங்களோடு அந்த அம்மையாருக்கு நெருங்கிய உறவினரான வேறு ஆறு ஆண்மக்களுங் கூட வருவார்கள். யான் ஒருத்தியே அவர் களோடு வந்தாலன்றித் தாம் உயிர் வாழமுடியாதென்று அந்த அம்மையார் ஒரே பிடியாயிருத் தலாலும், அதன் முடிவை இன்றிரவே தெரிந்துகொள்ளவேண்டு மென்றும் ஆத்திரம் அவர்களுள்ளத்தைக் கவர்ந்து கொண்டமை யாலும் என்னோடு கூட எனக்குத் துணையாய் வரத்தக்க பெண் பிள்ளை வேறு எவரும் இன்மையாலும் அந்த அம்மையார் என்னுடன் புறப்படுவதற்கு உறுதி செய்து விட்டார்கள். எங்களுடன் வருஞ் சேவகர்களும் மற்றைய ஆண்மக்களும் கைத் துப்பாக்கி தாங்கிப் படைக்கலம் பூண்டிருப்பார்கள். துப்பாக்கி களையும் படைக்கலங்களையும் எடுத்துக்கையாள்வதில் அவர்கள் எல்லாரும் மிகத்திறமை வாய்ந்தவர்கள். அதனோடு, எவ்வகை யான இடருக்கும் அஞ்சாநெஞ்சு வாய்ந்தவர்கள். ஆயினும், உண்மைக்குக் கட்டுப்பட்டு நன்மையே செய்யுங் கட்டுப்பாடு உடையவர்கள். என் பொருட்டு அந்தப்பாரசிக கனவானுக்கும்

என்

தமையனுக்கும் இந்த அம்மையார்க்கும் அவர் குழந்தைகட்கும் இத்தனை துன்பம் நேர்ந்தமையால் அவ்விரு வரையும் மீட்டுக் கொண்டாலல்லாமல் என் உயிர் இங்கு நில்லாது. என் உயிரை ஒரு துரும்பாக நினைத்திருக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/218&oldid=1582307" இலிருந்து மீள்விக்கப்பட்டது