உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி

கோகிலாம்பாள் கடிதங்கள்

217

விளையாவிடினுந் தீமையாவது விளையாவிட்டால் அதனை ஒரு நன்மையாகக் கருதலாம். அப்படியும் இல்லையே. நீதிநூல்களைப் படிப்பவர்கள் அவற்றால் விலக்கப்பட்ட குற்றங்களைத் தாம் செய்து கொண்டே, பிறரிடும் மட்டும் அவற்றாற் சொல்லப்பட்ட குற்றங்களைக் கண்டுபிடிக்க முயன்று புறங்கூறித் திரிகின்றார்கள். பிறரைக் குற்றஞ் சொல்வதற்கு மட்டுந் தாங்கற்ற நீதிநூல்களைப் பயன்படுத்து கின்றார்கள். இவ்வாறு புறங்கூறித் திரிதலாற் பல பெருந் தீமைகளைச் செய்கின்றனர், பகைமையையும் பொல்லாங்கையும் வளர்க்கின்றனர். நீதிநூற்படிப்பால் விளைந்த பயன் இவ்வளவு தான். மக்கள் வாழ்க்கையிற் குற்றங்கள் விளைதற்குரிய காரணங்கள் எவ்வெவை என்று நுட்பமாய் ஆராய்ந்துபார்த்து, அக்குற்றங்கள் வராமல் இருக்கத்தக்க ஏற்பாடுகளை வகுத்து வற்புறுத்தும் நூல்களே நீதிநூல்களாகும். அத்தகைய நூல்களால் ளையும் பயன், குற்றங்களை மட்டும் எடுத்துச் சொல்லி விலக்கும் நீதிநூல்களால் எள்ளளவும் விளையமாட்டாது. நீதிநூல்களை வருந்தி எழுதிய ஆசிரியர்கள் அவற்றை எழுதாமல் இருந்திருப்பார்களானால் நம் நாட்டுக்கு எவ்வளவோ நன்மையைச் செய்திருப்பார்கள்! அது கிடக்கட்டும். சாதிக் கட்டுப்பாடு குலங் கோத்திரம் முதலிய கட்டுப்பாடுகளைச் செய்தவர்கள் ஆண் பெண் மக்களின் மனத்தையுங் கட்டுப்படுத்தக் கற்றிருந்தால் அவர்களது எண்ணம்போல் அவர்களை நடக்கச் செய்யலாமே! பிறர் மனங்களைக் கட்டுப்படுத்தத்தக்க வழி வகைகள் தெரியாதவரையில் மற்றக் கட்டுப்பாடுகள் யாது பயனைச் செய்யும்? சாதி குலங் கோத்திரம் முதலிய கட்டுப்பாடுகளால் நம்மவர் நெருக்கப்பட்டு அறிவும் இன்பமும் இல்லாதவர்களாய், வரவரப் பலவகைத் துன்பங்களாற் குன்றிப் பிறருக்கு அடிமைகளாய் மாடுபோல் உழைத்து மாள்கின்றனர்! இக்கட்டுப்பாடுகள் இல்லாத ஆங்கிலரோ அறிவும் இன்பமும் நாளுக்கு நாள் வளரப்பெற்று நம்மையெல்லாம் ஆள்வதோடு, இந் நிலவுலகம் முழுமைக்குமே தலைவர்களாய் இருக்கின்றனர்! ஆதலாற் பாட்டா, என் உயிரையும் பொருளையும் இழந்தாலும் யான் ஒருவர்மேல் வைத்த காதலன்பை மாற்றி இனி மற்றொரு வரை மணக்க இசையேன்!” என்று மிகுந்த மனத்துணிவோடு தங்குதடையின்றிப் பேசினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/246&oldid=1582528" இலிருந்து மீள்விக்கப்பட்டது