உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் -14

என்னுடைய சொற்களைக் கேட்டு வியப்புடையவராய் அவற்றை மறுக்கமாட்டாமல் வாய்மூடிச் சிறிதுநேரம் சும்மா ருந்த அம்முதியவர் “அம்மா, நீ மிகுந்த மேதாவியாய் ருக்கின்றாய்; உன்னுடைய நுண்ணறிவுக்காக நான் மனம் மகிழ்கின்றேன். உன்னுடைய அறிவுக்குங் கல்விக்குந் தக்கபடி நீ ஒரு மணமகனை நாடியது நியாயந்தான். ஆனாலுங், குலங்கோத் திரங்களைக் கடந்தும், பெற்றார் சுற்றத்தார் உடன்பாடு பெறாமலும் ஒருபெண் தன் மனத்திற்குப் பிடித்த ஒருவனை நாடிச் செல்லுதல் வியபிசார தோஷமாய் முடியுமே என்று தான் நான் பயப்படுகிறேன்." என்று சிறிது பணிவான சொற்களோடு கூறினார்.

“பாட்டா, ஒருபெண் தன் உயிரினும் மேலாக ஒருவனைக் காதலித்திருக்க, அவள் பெற்றாரும் சுற்றத்தாரும் அவளுடைய கருத்தையும் உடன்பாட்டையும் எள்ளளவுந் தெரிந்துகொள்ள முயலாமல், அவள் மனம் பற்றாத வேறொருவனுக்குப் பிணைத்து விடுவதுதான் அச்சிறுபெண்ணை வியபிசார தோஷத்திற்கு உள்ளாக்குவதாய் முடிகின்றது. அவள்மனம் வேறொருவனை நாடியிருக்க, அவளைச் சேர்ந்தவர்களோ அவளைப் பிறன் ஒருவனுக்கு அடிமையாக்கி அவளது கற்பொழுக்கத்தைக் குலைக்கிறார்கள். அந்தப் பாவம் அவள் உறவினர்க்கே யல்லாமல் அவளுக்குச் சிறிதும் வராது. மேலிருந்து எல்லார்க்கும் பொதுவாயிருக்கும் அப்பன் அவள் உள்ளத்தின் பாங்கை நன்கு அறிவனாகையால், அவரவர் பாவ புண்ணியப் பயன்களைத் தினையளவும் பிசகாமல் அளந்து பார்த்து அவளுக்கும் நடுவுதவறாத நன்மையே செய்வானென்பது திண்ணம். மனிதர் மனிதரைக் கைவிட்டாலும், மனிதரைக் கடவுள் கைவிடா ரென்பதே எனது நம்பிக்கை. என்று ஊக்கத்தோடும் உருக்கத்தோடுஞ் சொன்னேன்.

66

அம்மா நீ சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. இனி எனக்குப் பேச வாய்இல்லை. என் மகன் செய்த கட்டாயத்தினாலும், உன்னைக் கொண்டாவது என்மகனை நல்வழிப்படுத்தலா மென்னும் எண்ணத்தினாலும் இவ்வளவு தூரம் உன்னோடு வாதாடினேன். மகா உத்தமியாகிய உன்னுடைய மன நிலையைக் கெடுப்பது பெரும் பாவமாகும்! ஆனாலும், என் மகன்மேல் வைத்த வாஞ்சையால் இவ்வளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/247&oldid=1582529" இலிருந்து மீள்விக்கப்பட்டது