உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிவாய்

கோகிலாம்பாள் கடிதங்கள்

219

பேசலானேன்.நான் இப்போது எங்களிருப்பிடத்திற்குப் போய் என் மகனுக்கு வேண்டிய புத்திமதிகள் சொல்லுகிறேன். அவன் பிற்பகலில் இங்கேவந்து உன்னோடு நேரே பேசவேண்டு மென்று சொன்னான். அவன் கெட்டவன் அல்லன், தீங்கு செய்ய மாட்டான். ஆதலால் நீ தாராளமாய் அஞ்சாமல் அவனுக்குச் சொல்லவேண்டிய நீதிகளை யெல்லாஞ் சற்று நயமாகவே எடுத்துப் பேசலாம். உன்னையும், உன்னைச் சேர்ந்தவர்களையும் இங்கிருந்து விடுதலை செய்யவேண்டிய முயற்சிகளையும் பண்ணுகிறேன். இங்கே ஏதொரு பயத்திற்கும் இடம் இல்லை. ஆதலால், நீ இங்கே நிர்ப்பயமாய் இரு. மறுபடியுஞ் சாய்ங்காலம் நானும் என் அகத்துக்காரியும் வந்து, இராப்பொழுதிற்கு உனக்குத் துணையாய்ப் படுத்துக் கொள்வோம்.” என்றார்.

66

அருமைப் பாட்டா, தங்கள் பேரன்பிற்காகத் தங்களை நன்றியுடன் வணங்குகின்றேன். தங்கள் மகனார் நல்லவரா யிருந்தாலும், அவர் மிகக் கொடிய சிலருடைய தூண்டுதலால் எங்களை இங்கே கொண்டுவந்திருப்பதால், அவர் தங்கள் புத்தி மதிகளைக்கேட்டு எங்களை விடுதலை செய்வாரென்று தோன்றவில்லை. ஆதலால், தாங்களே, எளியேங்கள்மீது அன்பும் இரக்கமும்வைத்து அவர்களுக்குத் தெரியாமல் எங்களை இவ்விடத்தினின்றும் விடுதலை செய்து விடுவீர்களானால், தங்களுக்குப் பெரும் புண்ணியமாகும்.” என்று அவரை மன்றாடிக் கேட்டேன்.

“குழந்தாய், நானோ வயசான மனிதன். இந்த மலைப்பிர தேசத்தைவிட்டு அகன்று பம்பாய்க்காவது மற்ற நாடுநகரங் களுக்காவது போய்ச் சேரும் வழிதுறை சிறிதும் எனக்குத் தெரியாது.யானும் என் குடும்பத்தாரும் இங்கே வந்தபிறகு இந்த டத்தைவிட்டு வேறு எந்த இடத்திற்கும் யான் செல்லவில்லை. இந்த மலைக்கு அருகாமையில் வேறொரு மலைத்தொடர் இருக்கின்றது. அம் மலைத்தொடர் ஒரு சிறு வட்டமாய்ச் சூழ அதன் நடுவிலே அகல நிகளத்திற் கால்மைல் அளவுள்ள ஒரு சிறு காடு அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கின்றது. அக் காட்டிலே தான் எங்களுக்கு வசதியான ஒர் இலைக்குடிசை யிருக் கின்றது. அதற்கு இங்கிருந்து மேடுபள்ளம் இல்லாமற் சமமாய்ப்போகும் ஒரு சிற்றடிப்பாதை இருக்கின்றது. அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/248&oldid=1582530" இலிருந்து மீள்விக்கப்பட்டது