உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் -14

வழியாக அவ்விடத்திற்குச் செல்வதும், அங்கிருந்து இங்கேவந்து பரமேசுவரிக்கு இரண்டுகாலபூஜை செய்வதுந் தவிர, வேறு இந்தப் பிரதேசத்தின் தன்மைகளாவது, இங்கே என் மகனோடு சேர்ந்தவர்கள் இருக்கும் இடங்களாவது, அவர்கள் நடத்துங் காரியங்களாவது எனக்குத் தெரியமாட்டா." என்று உண்மை தோன்றக் கூறினார்.

“அப்படியனாால்,

பாட்டா, தங்கள் மகனாரைச் சேர்ந்தவர்கள் இன்னாரென்பதும், அவர்கள் இத்தனை பெயர்களளென்பதுந் தங்கட்குச் சிறிதுந் தெரியாவோ?” என்று வினாவினேன்.

“அம்மா, அப்டியன்று; வெள்ளிக்கிழமைதோறும் மாலை பத்துமணிக்கு இங்கே ஈசுவரிக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்றிரவு தான் என் மகனைச் சேர்ந்தவர்கள் எல்லாரையும்

வ்விடத்திற் பார்க்கலாம். என் மகனோடு இந்தப் பிரதேசத்தில் நெடுங் காலமாய் இருப்பவர்கள் எட்டுப் பொல்லாத திருடர்களும் அவர்கள் குடும்பத்தாருமே யாவர். ஆனால், இடையிடையே வேறு சிலர் புதிதாக வருவதும் போவதுமாய் ருக்கிறார்கள். அங்ஙனம் வந்து போகிறவர்கள் தாமே திருட்டுத் தொழிலைச் செய்பவர்களாகத் தெரியவில்லை; இந்தத் திருடர்களுக்கு உளவு சொல்லுகிறவர் களாகவே காணப்படு கின்றனர். பூஜை நடந்தபின் யானும் என் மகனும் எங்கள் இருப்பிடத்திற்குப் போய்விடுவது வழக்கம். ஆனால், என் மகனைச் சேர்ந்தவர்கள் மட்டும் அன்றிரவு முழுதும் இந்தக் கோயிலிலேயே இருந்து போவார்கள். அவர்கள் ஏதுக்காக இரவுமுழுதும் இங்கே தங்குகிறார்களென்பது எனக்குத் தெரியாது. அதைப்பற்றி என்மகனைப் பலகால் யான்கேட்டும் 'எங்கள் இரகசியங்களில், அப்பா, தாங்கள் தலையிட வேண்டாம்' எனக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வானே தவிர அதன் உண்மையைத் தெரிவிப்பதில்லை. ஆதலால், அறிவுள்ள குழந்தாய், நான் உங்களை விடுவிக்கத்தக்க நிலைமையில் இல்லாதிருக்கிறேன். இந்த இடத்தை மட்டும் விட்டு வெளியே வர உங்களுக்கு வழிகாட்டினாலும், குகையின் வெளியே வந்தபின் அடுக்கடுக்காய் இருக்கும் மலைகளின் ஊடும், இப்பிரதேசம் எங்குமுள்ள கருங் காடுகளின் ஊடும், அவற்றில் நிறைந்த புலி கரடி சிறுத்தை ஓநாய் மலைப்பாம்பு முதலான கொடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/249&oldid=1582531" இலிருந்து மீள்விக்கப்பட்டது