உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

223

நேரம் போனது எனக்குத் தெரியாது. பொழுது இக் குகைவாயிலின் கதவிலுள்ள பூட்டில் சாவி கரகரவென்று திரும்பும் ஓசை கேட்டது. உடனே யான் திடுக்கிட் டெழுந்து அச்சமுந் திகிலுங்கொண்டு, உள்ளீடில்லாச் சுரைக்கூடுபோல் காற்றில் நடந்து கோயிலின் வெளியேவந்து அதன் கீழ்ப்படிமேல் அயர்ந்து உட்கார்ந்தேன். இதற்குள் முன்வாயிலின் கதவு படீரெனத்திறக்க உயர்ந்து நீண்ட ஓர் ஆண்மகன் உள்ளே வந்தனன். இப்போது என் உயிர் உடம்பிலுள்ளதோ அதன் வெளியேயுள்ளதோ அறியேன், என் கண்கள் திறந்தபடியே இமையாமல் நின்றன, அவனைப் பார்த்தபடியே சோர்ந்து மேற் படிமேற் சாய்ந்துவிட்டேன், அவன் தனது கையில் ஒருசிறு பிரப்பங்கூடை கொண்டு வந்தான்.கொண்டுவந்த கூடையை என் அருகில் வைத்து, அதன் மேன் மூடியைத் திறந்து உள்ளிருந்த ஒரு புட்டிலை யெடுத்து, அதன்னுள்ளிருந்த நீரை என் முகத்திற் றெளித்தான்; அது பனிநீர். அதன்பின் என்னை அணைத்தெடுத்துத் தன்றொடைமேற் சாத்திக் கொள்ளக் கையை நீட்டினான். உடனே என் நிலை எனக்குவந்தது; ‘என்னைத் தொடவேண்டாம்' என்று கைக்குறி காட்டினேன். அதற்கு இசைந்து அவன் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு சும்மா குந்தியிருக்க, யான் ஒருவாறு மனவமைதி பெற்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ம்பின்

என் கண்களினெதிரே யிருந்த அவ்வாண்மகனது வடிவம் அஞ்சத்தக்கதா யில்லை. அவன் முக அமைப்பும் உட அமைப்பும் அழகு மிகுந்தனவாகவேயிருந்தன. என்னாருயிர்த் தெய்வநாயகம், தங்கள் அழகிற்கும் என் தமைய னழகிற்கும் அவனை அடுத்தபடியாகச் சொல்லலாம். தங்கள் முகத்திலும் உடம்பிலுங் கடைந்து திருந்திய உறுப்பின் அழகோடு மென்றன்மைக்கு அடை யாளமான தாமரை யிதழின் மென்மையுங் கல்வியால் உள்நிறைந்து ஒளிவீசும் உயர்ந்த அறிவுக்கு அடையாளமான ஒரு பேரொளியும் நிரம்பித் துலங்க, இவனது வடிவத்திலோ ஒரு வல்லென்ற தன்மையும் மற்றுமொரு மங்கல் நிறமுங் காணப்பட்டன. இவ்வன்றன்மை அவனுக்கு இடையிலே வந்ததாகல்வேண்டும்; ஏனென்றால் அஃது அவன் வடிவத்தில் நன்றாக முதிர்ந்து தோன்ற வில்லை; அவனுக்கு உயர்ந்த கல்வியறிவு இல்லாமையாற் போலும் மங்கலான நிறங் காணப்பட்டது. இவ்விரண்டு குற்றங்களும் இல்லையானால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/252&oldid=1582534" இலிருந்து மீள்விக்கப்பட்டது