உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் -14

அவனது வடிவத்தினழகை உயர்ந்த தர முடையதாகத்தான் சால்லல் வேண்டும். அவனது மேலுதட்டின் மேற் கறுகறுத்து விளங்கிய முறுக்கு மீசைதான் அவனுக்கு ஓர் ஆண்டன்மை யினைக் கற்பித்ததேயல்லாமல், அவனது வடிவம் பெரும்பாலும் ஒரு பெண்மகள் வடிவத்தையே ஒத்திருந்தது. அதனால், யான் இவனைப்பற்றி முதலிற்கொண்ட அச்சமுந் திகிலம் ஒருவாறு தணிந்தன. என் அருகில் வந்தவுடன் இவன் எனக்குச் செய்த உபசாரமும், என்னைத் தொடவேண்டா மென்று யான் கை அமர்த்த அவன் அப்படியே விலகியிருந்தமையும் எனக்கு மீண்டும் மனத் துணிவைத் தந்தன. யான் செவ்வையான நிலைமைக்கு வந்ததைப் பார்த்தவுடன் அவன் பின் வருமாறு பேசலானான்.

"நான் யாரோவென்று நினைக்கவேண்டாம். இங்கே பரமேசுவரிக்குப் பூஜைசெய்யும் வயோதிகப் பிராமணருக்கு நான் ஒரே குமாரன். எங்களுடைய வரலாறெல்லாம் என் தகப்பனார் உனக்குத் தெரிவித்திருக்கிறார். நான் சுபாவத்தில் நல்லவனே u யனாலும், இளமைக்காலத்தில் நான் அடைந்த வறுமையும் சுற்றத்தார் அவமதிப்புமே என்னை இந்தக் கள்வர் கூட்டத்தில் சம்பந்தப்படும்படி செய்தன. எனக்குப் போதுமான கல்வியறிவும் உண்டு. தமிழிற் பலநூல்களைப் படித்திருக்கின்றேன். உன்னைப் பார்த்த நிமிஷந் தொட்டும், உன்னுடைய அருமைகளைக் கேட்ட நேரந்தொட்டும்

உன்னை என் ஆருயிராய்ப்பாவித்து அன்புபாராட்டுகின்றேன். நீ என்னை விவாகஞ் செய்து கொண்டால் யான் நல்வழியில் திரும்பி உன்னைச் சுகவாழ்வில் வைப்பதனையே எனது தவமாய்க்கொண்டு உயிர்வாழ்வேன். நீ என்னை மறந்துவிட்டால் உன் காலடியில் வீழ்ந்து என் உயிரை மாய்த்துவிடுவதற்கே தீர்மானித்திருக்கின்றேன். உனது கூந்தலில் உள்ள ஒருசிறு மயிருக்குங் கூடத் தீங்குசெய்ய என்மனந் துணியாது.நான் இதற்குமுன் பிழைபட நடந்தவைகளை எல்லாம், என் தெய்வமே போல்வாய், நீயே மன்னித்தல் வேண்டும். உனது சொல்லில் எனது வாழ்வு இருக்கின்றது. நீ காலால் ஏவியவற்றை யான் தலையாற் செய்வேன். என்று பணிவோடும்

ருக்கத்தோடும் பேசினான்:

இவனுக்கு எங்ஙனம் விடைகூறுவ தென்று தெரியாமற் சிறிதுநேரந் திகைப்புற்று மயங்கி யிருந்தேன். தான் சொல்லியவை களுக்குத் தக்க விடை கூறினாலன்றித் தான் என்னை விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/253&oldid=1582536" இலிருந்து மீள்விக்கப்பட்டது