உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

225

போவதில்லை யென்றும், அன்னந் தண்ணீரும் அருந்துவ தில்லை யென்றும் உறுதிமொழி புகன்றான். பிறகு யான் ஒருவாறு மனத்திட்பங் காண்டு, யான் தங்கட்கு உரியவளாய் இருப்பதையும், தங்களை யல்லாமல் வேறொருவரை மணக்கக் கனவிலும் இசையேனென்பதையும் வற்புறுத்திப் பேசி, அவன் தந்தையாரிடம் யான்முன் சொல்லியவைகளை யெல்லாந் திரும்பவும் எடுத்துச் சொன்னேன். யான் தீர்மானத்தோடும் பேசியவைகளைக் கேட்டு அவன் முகம் வாட்டம் அடைந்தது. சோர்வுடன் பெருமூச்செறிந்து வாய்பேசாமல் தலை குனிந்த படியாய் நெடுநேரங் கன்னத்தின்மேற் கைகளை ஊன்றிக்கொண்டு என்னெதிரில் உட்கார்ந்திருந்தான். இவனை இந்த நிலைமையிற் பார்ப்பது எனக்கு இரக்கமாகவே யிருந்தது. அதனால், திரும்பவும் பின்வருமாறு கூறினேன்:

66

ஐயா, ஏழைச் சிறுமியாகிய என்பொருட்டு நீங்கள் இவ்வளவு வருந்துதலிற் பயனில்லை. மணவாழ்க்கை யென்பது காதலனுங் காதலியும் ஒருவரோ டொருவர் இயற்கையிலேயே அளவுக்கடங்கா அன்புடையராய்க் கூடி வாழப் பெறுவதாகும். அவ்விருவரில் ஒருவர்க்கு அன்பில்லையானாலும் அது பிண வாழ்க்கையே யாகு மல்லாமல் மணவாழ்க்கை யாக மாட்டாது. இயற்கையே ஒருவருள்ளத்தில் உண்டாகாத அன்பைப் பால் அடையில் வைத்துப் புகட்டுவதுபோற் செயற்கையாகப் புகட்ட முடியுமோ? ஆதலால், தாங்கள் என்னை வேறுவகையில் அன்பு பாராட்டுவதை விடுத்துத், தங்கள் புதல்வியாகவாவது தங்கையாகவாவது என்பால் அன்பு செலுத்துவீர்களானால், யானுந் தங்களைத் தந்தையாகவோ தமையனாகவோ நினைத்து அன்பு பாராட்டிச், ‘சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்' என்றபடி எளியேனுந் தங்கட்கு என்னாற் செய்யக்கூடிய உதவியெல்லாஞ் செய்வேன். என்னோடுகூடக் கொண்டுவந்து நீங்கள்

சிறைப்படுத்தியிருக்கும் பாரசிகப் பெருமான் நிரம்ப உயர்ந்த தன்மையும் மிகப் பெரிய செல்வமும் வாய்ந்தவர். அவரைக் கொண்டு தங்கட்கு அழகாற் சிறந்த நல்ல ஒரு பெண்ணை மணஞ் செய்து வைக்கவும், வேண்டும் அளவு உங்கட்குப் பொருள் வருவாயை உண்டுபண்ணவுங் கூடும். ஆனதால், தாங்கள் எளியேன் மீது வைத்த அன்பிற்கு அடையாளமாக எங்களை யெல்லாம் இவ்விடத்தினின்றும் விடுதலைசெய்து, தாங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/254&oldid=1582537" இலிருந்து மீள்விக்கப்பட்டது