உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் -14

இப்போது செய்துவருந் தொழிலை அறவே நீக்கி எங்களுடன் வந்து எங்களோடிருக்க வேண்டுகின்றேன்.

“பெண்மணி, அன்பைக் கரைத்துப் புகட்டமுடியா தென்றும், அது தன்னியற்கையாகத் தோன்ற வேண்டுமென்றும் நீ சொல்லியது உண்மையே. உன்னிடத்தில் எனக்கு அன்பு உண்டாகும்படி புகட்டினார் ஒருவருமில்லை. அஃது இயற்கையாகவே எனக்குத் தோன்றியது. ஆதலால், என்னுடைய அன்பிற்கு இசைந்துதான் நீ நடக்கவேண்டும். என்னை முன்பின் அறியாததனாலும், கொள்ளைக் கள்வரால் இங்கே கொண்டுவந்ததனாலும் நீ என்மேல் அச்சங்கொண் டிருக்கின்றாய், அந்த அச்சம் நீங்க நீங்க நீ என்மேல் அன்பு பாராட்டுவாய், ஆதலால், இப்போது நீ ஒன்றுந் தீர்மானமாகச் சொல்ல வேண்டாம். இன்னும் நாலைந்து நாள் போன பிறகு உனது தீர்மானத்தைத் தெரிவிக்கலாம். இங்கே உனக்கு வேண்டும் சௌகரியங் ளெல்லாம் நாங்களே தெரிந்து செய்து வருகின்றோம். இன்னும் ஏதேனும் ஆக வேண்டியது இருந்தால் தெரிவி.” என்று கேட்டான்.

66

நீ

எனக்காக என்னுடன் வந்தவர்களைச் சிறைப்படுத்தி வருத்துவது நன்றாகுமோ? ஆதலால் அவர்களையேனும் மனமிரங்கி விடுவித்து விடுவீர்களாயின் ஒருவாறு ஆறுத லடைவேன்.” என்றேன்.

66

'பெண்ணே, அவர்களை இப்போது விடுதலை செய்தால், அவர்கள் உடனே உன்னை மீட்பதற்காகவும் எங்களைப் பிடித்துச் சிறையில் அடைப்பதற்காகவும் அரசாங்கத்தார்க்கு அறிவித்து அவர்களோடு சேர்ந்து கடுமுயற்சி செய்வார்கள். ஆதலால், நாம் இருதரத்தாரும் ஒழுங்கான ஓர் ஏற்பாட்டுக்கு வரும் வரையில் அவர்களை இங்கேதான் வைத்திருக்கவேண்டும். அதற்காக, நீ மனம் வருந்தாமல் என்னை மன்னித்தல் வேண்டும். திரும்பவும் நாளைப் பிற்பகலில் இங்கேவருகிறேன். என் பெற்றோர்கள் இன்னுஞ் சிறிது நேரத்தில் இங்கே வருவார்கள்." என்று சொல்லியபின் எழுந்து, அம்மையை வணங்கிக்கொண்டு, குகையின் முன்வாயிற் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டிக் கொண்டு போயினான். தலையிலிருந்த ஒரு பெருஞ் சுமையை இறக்கிவைத்தவள் போல் உடனே யான் பெரியதோர் ஆறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/255&oldid=1582539" இலிருந்து மீள்விக்கப்பட்டது