உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

227

பெற்றேன். பேசிச் சென்ற இவனால் ஏதொருதீங்கும் நேராமல் ஏழையேனைப் பாதுகாத்த அம்மையின் அருளை வாழ்த்திப் பலகால் அவள் திருவுருவத்தின் அடியில் வீழ்ந்து வணங்கினேன். இவன் தந்தையார் சொல்லியபடியே இவன் நல்லவனாயிருத்தல் பற்றிச் சிறிது மனநிறைவு கொண்டேனாயினும், இத்தகைய நல்லியல்புள்ளவன் கொடிய கள்வர்களுடன் கூடிப் பலர்க்குத் தீங்கிழைத்து வருவதை நினைக்க என் மனம் அச்சமும் வருத்தமுங் கொண்டது. இவனைத்திருத்தி இவனால் யாங்கள் விடுதலை பெறுவதுடன், இவனையும் இவன் பெற்றோரையுங் கூடக் கொண்டு சென்று, இவர்களை நன்னிலையில் வைத்தற்கு என்னுள்ளம் பெரிதும் விரும்பியது. ஆனால், இவனைத் திருத்தத்தக்க வழியொன்றும் புலனாகவில்லை. ஆகவே, மனக் கலக்கத்தோடும் பலவாறு நினைந்துகொண்டிருக்கையில், மறுபடியுங் குவைவாயிற் கதவிற் சாவி திரும்பும் ஓசை கேட்டது; இரண்டொரு நொடியிற் கதவு திறக்க அப்பார்ப்பனப் பெரியோரும் அவர் பின்னே அவரைப் போலவே முதியோளான அவர்தம் மனைவியாரும் உள்ளே வந்தார்கள். அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றேன். எனக்குள்ள வருத்தத்தாற் புன் சிரிப்புங் கொண்டிலேன். அவர்களிருவருஞ் சிங்கச் சிலையண்டை வந்து உட்கார்ந்து, என்னையுந் தமக்கு அருகில் இருக்கும் படி கற்பித்தனர். இந்தப் பெரியவரைப் போலவே இவர்தம் மனைவியாரின் வடிவமும் பார்க்கப்பார்க்க மகிழ்ச்சி தரத்தக்க தாயிருந்தது. இளமைக்காலத்தில் இந்த அம்மையார் நிகரற்ற வேண்டும். பொன்னிறமா

அழகுடையவராயிருந்திருக்க

யிருந்தாலும் இப்போது தோல் திரைந்து தலை நரைத்திருப்பதால் அவ்வழகு சிறிது சிறிது மாறிப்போயிற்று. ஆனாலும், முகத்தில் உள்ள ஒருவகையான களையும் மலர்ச்சியும் முதுமையும் இந்த அம்மையாரின் நல்ல இயற்கையைப் புலப்படுத்தின. தாய் தந்தையர் இருவரும் இங்ஙனம் மிக நல்லவராயிருக்க இவர்கட்குப் பிறந்த மகன் தீயனாவது பொருந்தாது. ஆதலால், இவர்கள் மகன் கள்வர்கூட்டத்திற் சேர்ந்ததற்குக் கொடிய வறுமையும் ஊழ்வினையுந்தாங் காரணமாயிருக்க வேண்டுமென்பது என்மனத்திற்பட்டது. இவர்களைப் பார்க்கப் பார்க்க இவர்கள் மகன் நல்வழியில் திரும்பும்படி அருள்புரிதல் வேண்டுமென

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/256&oldid=1582540" இலிருந்து மீள்விக்கப்பட்டது