உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் -14

அம்மையை இரந்து கேட்டேன். குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தவுடன் அப் பெரியவர் என்னை நோக்கிக்,

"குழந்தாய், இவள்தான் என் அகத்துக்காரி; உன்னைப் பார்ப்பதற்காகவும், உனக்குத் துணையிருப்பதற்காகவும் அழைத்து வந்தேன்.” என்றார்.

இதற்குள் அந்த முதிய அம்மையார் “அருமைக் குழந்தே, உன்னைப்பார்த்தால் என் பேர்த்திப்பிள்ளைபோலிருக்கின்றது. என்மகள் உயிரோடிருந்தால், உன் அவ்வளவு ஒரு பேர்த்திப் பிள்ளை இருக்க வேண்டும். உன்னைப் பார்த்தால் என் மகளுடைய நினைவே எனக்கு வருகின்றது!-” என்று கூறுகையில் அந்தப் பெரியோளின் கண்களில் நீர் ததும்பிற்று.

L

அதைப்பார்த்ததும் அந்தப் பெரியவர் "இந்தக் குழந்தைக்கு உன் மகனால் நேர்ந்த இடையூறு போதாதா! நீயும் ஏன் இப்போது உன் அழுகையைக் காட்டி இவளைத் துன்பப்படுத்த வேண்டும்?” என்று சொல்லி அந்த அம்மையாரை அமர்த்தி விட்டு எனக்கும் ஆறுதல் சொன்னார்.

அதன்பின் அந்த அம்மையார் “நம்ம பையன் செய்ததும் நன்மையாயிற்று, அவன் கொண்டு வந்ததனா லன்றோ நாம் இந்தக் குழந்தையைக் காணலாயிற்று!" என்று மகிழ்வோடு கூறினார்.

இந்நேரத்தில் என்னை வெளியே அழைத்துக் கொண்டு போவதற்காகக் காலையில்வந்த பெண்பிள்ளை குகையினுள்ளே வந்தாள். அந்தப் பெரியவர் பகற்பொழுது போவதற்குமுன் என்னை வெளியே போய்வரும்படி கற்பித்தமையால் யான் அவளைப் பின்றொடர்ந்து காலையிற் சென்ற இடத்திற்கே போய் மாலைக் கடன்களை முடித்துத் திரும்பினேன். இதற்குள்ளாக அந்தப் பெரியவர் சாய்ங்கால பூஜைக்காக அம்மைக்குத் திருமுழுக்குச் செய்வித்துப் பலநிறப்பூக்கள் அணிந்து அழகாக ஒப்பனை செய்து வைத்திருந்தார். யான் வந்தவுடன் அகில் புகைத்துக் கர்ப்பூரங் கொளுத்தி வழிபாடு செய்தார். இப்போது என்னைப் பற்றிய அளவில் ஒருவாறு அச்சம் நீங்கியதாயினும், அந்தப் பாரசிக கனவானும் என் தமையனுஞ் சிறையில் அடைபட்டுக் கிடத்தலை நினைக்க நினைக்க என் உள்ளம்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/257&oldid=1582541" இலிருந்து மீள்விக்கப்பட்டது