உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

249

அம்மையத்திலிருந்து யாங்கள் இப்போது நிற்கும் வடபுறம் அவ்வட்டத்தின் ஒரு பாதியாகவும், அப் பாதியில் யாங்கள் வண்டியி லிருந்து இறங்கி இப்போது வந்து சேர்ந்த இடம் வரையில் அப் பாதிவட்டத்தில் ஓர் அரைப்பாகமாகவுங் குறித்துக் கழித்து, அதன் மற்றை அரைப்பாகமே யான் சொல்லிய குகையிருக்க வேண்டுமிடமாக அவர் உறுதிசெய்து, பிறகு யாமிப்போதிருக்கும் மையத்திலிருந்து பலகோடுகள் இழுத்து, அங்ஙனங் கடிதத்திற் குறித்த படியே அவ் விடத்தைக் கண்டுவரத் தீர்மானித்தார். அவர் குறித்த கோட்டுக் கணக்கும், அதற்குத் தக்கபடி அவர் செய்த திசைவரையறையும், அவர் வரைந்து காட்டிய அம் மலைப் பாங்கின் நில அடையாளங்களும் நுண்ணறிவோடு ஞ் செய்யப் பட்டமையால், அவர் அவ்விடத்தைக் கட்டாயங் கண்டு மீள்வார் என்பது எனக்கு உறுதியாய்ப்பட்டது. அதன்பின், தாம் அணிந்திருந்த படைக் கலங்களோடு சிறிது உணவுப்பண்டங்களும் எடுத்துக் கொண்டு அவ்வதிகாரியும் அவர் தெரிந்தெடுத்த சேவகரும் எங்களை விட்டுப் போயினார்கள்.

நாங்கள் இப்போ திருந்த பக்கத்தில் ஆல் அரசு முதிரை தேக்கு பாலை முதலான பெரியபெரிய மரங்கள் இடைக் கிடையே வளர்ந்தோங்கி நின்றன. கட்டிட வளைவுபோல் அடியிலிருந்து எழுந்து ஒருபாதி மேற்கவிந்து வளைந்திருந்த ஒரு மலைப் பாறையின் கீழே நடுவே நான்கடி அகல முள்ளதாய் வர வர அவ்வகலங் குறுகி இருபுறத்தும் முப்பதடி நீளச்செல்லும் ஒருசுனை இருந்தது. அதன்கண் உள்ள நீர் ஓயாமற் சுரந்து ஒரு முனையிற் சிறுக வழிந்துகொண்டே யிருந்தது.போன இருவரும் வழிகண்டு மீளும்வரையில், நாங்கள் அச்சுனையண்டையில் ஓங்கி வளர்ந்த ஒரு பாலைமரத்தின் அடியில் இருக்க ஏற்பாடுகள் செய்தோம். எங்களுக்கு உணவெடுப்பதிற்கூட மனஞ் செல்லாமை யால், போனவர் இருவரும் வழிதெரிந்து மீளவேண்டுமே என்னுங் கவலையால் இறைவியை நினைந்த படியாய் இன்றியமையாத காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, கையிற் கொணர்ந்த சில சிற்றுண்டிகளை மட்டும் அருந்தினோம். மற்ற ஆடவர்கள் எங்கட்குச் சிறிது எட்ட இருந்த ஓர் அரச மரத்தடியிற் சமையல் செய்வாராயினர். இரவு முற்றும் யாங்கள் விழித்திருந்தமை யாலும், வழிவந்த அயர்வாலும், இப்போது யாங்கள்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/278&oldid=1582570" இலிருந்து மீள்விக்கப்பட்டது