உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

279

எங்களைத் தடைசெய்தன. அதுவல்லாமலும், என் தமக்கையிடம் வளருங் குழந்தைகள் இரண்டும் அவள்பெற்ற பிள்ளைகள் அல்ல; யான்பெற்றவைகளே என்று மெய்ப்படுத்திக் காட்டவும் ஏதொருசாட்சியும் இல்லை; அவைகளைத் தாம்பெற்ற பிள்ளைகளென்றே என் தமக்கையும் அவள் கணவனும்

உறுதியாய் நம்பியிருக்கிறார்கள். ஆதலால், நாங்கள்

ன்

வாய்பேசாமல் திரும்பிச் செல்வதே நலம் என்று போனோம். அங்கேபோய்ப் பதினைந்து வருஷங்கள் இருந்தோம். இப்பதினைந்து வருஷங்களுக்கு இடையில் யான் குழந்தைகள் பல பெற்றமையாலும், சென்னைக்கு நெடுந்தூரத்தேயுள்ள பம்பாயில் இருந்தமையாலும், நம் குடும்பத்தாரைப்பற்றித் தெரிந்துகொள் வதற்கு ஏதொரு வழியும் பிறவாமையாலும், என்னுடைய நடையுடை பாவனைகளெல்லாம் பாரசிகக் குலத்திற்சேர்ந்து முற்றும் மாறிவிட்டமையாலும் யான் நம்மவர்களை யெல்லாம் இடைக்கிடையே சில நேரங்களில் தவிர மற்றக்காலங்களி லெல்லாம் பெரும்பாலும் மறந்தேபோனேன். மறுபடியும் வியாபாரத்தின் பொருட்டுச், சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன் சன்னைக்குவந்து திருவல்லிக்கேணியில் அம்மூன்று ஆண்டுகளுந் தங்கியிருந்தோமாயினும், நம்மைச்சேர்ந்தவர் களைப் பார்க்கவாவது அவர்களுடன் கலந்து பழகவாவது என்மனந் துணியவில்லை.யான் முதலிற்பெற்ற இருபிள்ளைகளும் பெரிவர்களாகிப் பார்ப்பனக் குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்துபோயிருப்பார்களென்று நினைத்தும், அவர்களைப் பார்ப்பதனால் யாங்கள் ஆறாத்துயரங்கொள்ளவும் அதனாற் பலஇடைஞ்சல்கள் வரவும் இடம் உண்டாகும் என்பதனை எண்ணிப்பார்த்தும் அதற்குந் துணிந்திலோம். என்றாலும், எங்கள் முதற்பிள்ளைகள் இரண்டை இரண்டையும், எங்கட்குக் கல்யாணம் ஆனவுடன் பிறந்து ஓர் ஆண்டிற்குமுன் இறந்துபோன எங்களின் மற்றொரு மகளையும் நினைந்து யாங்கள் இடைக் கிடையே பெருந்துயரம் உற்று வந்தோம். எங்கள் பெருந்துயரத்திற்கு இரங்கியே எல்லாம் வல்ல எம்பெருமான் எங்கள் மக்களாகிய சுப்பிரமணியத்தையுங் கோகிலத்தையுந் தற்செயலாய் எங்களுடன் சேர்த்து நம்மெல்லாரையும் இப்போது இங்கே ஒன்றுகட்டி வைத்தார்! என்று என் அன்னையார் சொல்லிமுடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/308&oldid=1582611" இலிருந்து மீள்விக்கப்பட்டது