உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

281

அவரவர்க்குரிய மனைவி மக்களை யெல்லாம் உள்ளழைத்து வந்தார்கள். அவர்களில் இறந்துபட்ட கள்வரின் மனைவிமார் தம் கணவர் மாண்டு கிடப்பதைக்கண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள்; மற்றையோரின் மனைவிமார் தம் கணவரை விடுதலைசெய்யும்படி எங்கள் எல்லார்முன்னும் வேண்டினார்கள். அப்பெண்பாலாருற்ற

விழுந்தழுது துயரத்தால் அவர்களிற்சிலருக்குள்ள சிறுபிள்ளைகளின் துயரத்தையும் கண்டு எங்கள் எல்லோருக்கும் மிகுந்த இரக்கம் உண்டாயிற்று. எங்கள் அருமைத் தாய் தந்தையரையும் பாட்டன் பாட்டி மாமன் முதலியோரையும் எல்லாங் கூடப்பெற்ற இந்த மகிழ்ச்சியான நேரத்தில், இவர்களைத் துயரப்படவிடுவது கூடா தென்பது எங்கள் எல்லார் மனங்களிலும்பட்டது.ஆகவே, தந்தையார் அப்பெண்பாலார் எல்லாரையும் அழுகையமர்த்தி, அவர்கள் எல்லார்க்கும் நன்மை செய்யத் தாம் எண்ணி யிருப்பதைக் கூறினார். அச்சொற்கேட்டு அவர்கள் எல்லாரும் அமைதியுற்றனர்.

அவ்வதிகாரியை

பிறகு என்னருமைத்தந்தையார் அழைத்துக் கொண்டு ஓர் ஒதுக்குப்புறமாய்ப்போய் இது வரையில் நடந்த எங்கள் வரலாறுகளை யெல்லாங் கூடிய வரையிற் சுருக்கமாகவுந் தெளிவாகவும் எடுத்து உரைத்தார். அவைகளைக் கேட்டு அவர் அடைந்த வியப்புக்கு ஓர் அளவில்லை. அவைகளெல்லாங்கூறி முடிந்தபின் அவ்விருவருங் கலந்துபேசி எங்களுக்குத் தெரிவித்து முடிவுகட்டியது இது: இறந்தவர்போகப் பிடிபட்ட கள்வர் நால்வரையுஞ் சிறையிடும் பொருட்டு அறமன்றத்திற் கொண்டு போய் நிறுத்தினால், அவர்கள் வாய் மொழியிலிருந்தே அவர்கட்குத் தலைவராயிருந்த என்மாமனுங் குற்றவாளியாகக் கொள்ளப்படுவார். ஆதலால், என்மாமனைக் காக்கும்பொருட்டும், அவரவர் மனைவிமார் துயரத்தை நீக்கும் பொருட்டும் பிடிபட்ட கள்வர் நால்வரையும் விடுதலைசெய்து அவர்களை நல்வழியிற் காலங் கழிக்குபடி செய்யவேண்டுவது இன்றியமையாத தாயிற்று. ஆனாலும், அவ்வதிகாரியுஞ் சேவகர்களும் எங்களுக்கு உதவியாகவந்து இம்மலைநாட்டிலுள்ள கள்வர்களைக்கொன்று எம்மவர்களை மீட்பிக்கும் பொருட்டு, இறந்துபட்ட அவர்கள் நால்வரையும் பம்பாயில் உள்ள நகர்காவற் சாவடிக்குக் கொண்டுபோக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/310&oldid=1582615" இலிருந்து மீள்விக்கப்பட்டது