உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் -14

வேண்டுவது கட்டாயமாகக்காணப்பட்டது. அதன்மேல் என் தந்தையார், அக்கள்வர் நால்வரும் உண்மைதவறாமல் நல்லொழுக்கமுடைய வராய் நடப்பதாக உறுதிமொழி சொன்னால், அவர்களைச் சிறைச் சாலைக்கு அனுப்பாமல் தம்கீழ் அலுவல் பார்க்க வை வத்துக் காண்டு தக்க சம்பளந் தருவதாகவிளம்பினார். அதற்கு அவர்களும் அவர்களின் மனைவிமாரும் மகிழ்வுடன் இசைந்து அம்மை திருவுருவத்தின் முன் ஆணையிட்டுக் கொடுத்தார்கள். அதன் மேல் அவர்கட்குப் பூட்டியிருந்த விலங்குகள் விடுவிக்கப்பட்டன. இறந்துபோன கள்வரின் ம மனைவிமார்க்குந் தக்கபொருளுதவி செய்து, அவர்களையும் அவர்களின் மக்களையுந் தமது பாதுகாப்பிலேயே தம்மிடம் உள்ள பலவேலைகளில் வைத்துக் கொள்வதாக என் மேன்மையுள்ள தந்தையார் கூறினார். இக்குகையின் கண் உள்ள உலகன்னையின் திருவருளால்யாங்கள் எல்லோரும் ஒருங்குகூடுதற்கு இவ்விடங் காரணமாய் இருந்தமையால், இக் கோயிலையும் இதன்கண் உள்ள அம்மையையுந் தலைமுறை தலை முறையாய் நங் குலதெய்வமாக வழிபடல் வேண்டுமென்றும், ஒருதிங்களுக்கு இரண்டுமுறை நாங்கள் எல்லாரும் இங்குவந்து வழிபாடாற்றிச் செல்லல்வேண்டு மென்றும், இதற்கு அருகாமையில் யாங்கள் தங்கிச்செல்லும் பொருட்டு ஒருமாளிகை கட்டல் வேண்டு மென்றும் என் தந்தையார் தீர்மானித்தார்.

இறந்துபோன கள்வர்களின் உடம்புகளைத் தூக்கிக் கொண்டு விடுதலை பெற்ற கள்வரில் இருவரும் சேவகரில் ஐவரும் எங்கள் ஆட்களில் ஒருவரும் உடனே சென்று பம்பா யிலுள்ள நகர்காவற் றலைவரிடம் அவைகளைச் சேர்ப்பிக்கும்படி கற்பிக்கப்பட்டார்கள். என் மாமனைத் தூக்கிக்கொண்ட நால்வரும், மற்றவர்களும் உடனே குகை வாயிலை விட்டுப் புறப் பட்டுப்போனார்கள். என் வளர்ப்புத்தந்தையையும் அவர் மகன் சேது ராமனையும் நாங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து குகைக்கு வெளியே மலையடிவாரத்திற் கொண்டுபோய் அடக்கஞ்செய் வித்தோம். எஞ்சிய சேவகர்களும் ஆட்களுங் குளித்து முழுகிக் கோயிலையுங் குகையையுந் துப்பரவு செய்ய, யாங்கள் எல்லாம் என் பாட்டன் பாட்டியிருந்த இருக்கைக்குப் போய்க் குளித்துப் பூசைக்குவேண்டும் பொருள்களோடு காளிகோட்டத்திற்குத் திரும்பிவந்தோம்.என் பாட்டனார் வழக்கம் போல் அம்மைக்குப் பூசைபுரிந்தார். எல்லோரும் அம்மையைத் தொழுது விடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/311&oldid=1582617" இலிருந்து மீள்விக்கப்பட்டது