உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

283

பெற்றுப், பாட்டனார் குடிலில் உணவுகொண்டு பம்பாய்க்குப் புறப் பட்டோம். என்பாட்டன் பாட்டிகளையும் என் அன்னையையும் என்னையுந் தொட்டிலில் ஏற்றிக் கொண்டார்கள். குகையின் புறத்தேயுள்ள வழியேவந்து, அவ்வழியிற் பிரியும் ஒரு கிளைவழியாய் அம் மலையினுள் ளிடத்தை விட்டு வெளி வந்தோம். இப்போது எங்கட்கு எங்கட்கு வழிகாட்டியாய்வரும் டுதலைபெற்ற கள்வன் ஒரு குறுக்குவழியாய் மூன்றுமணி நேரத்தில் எங்களைப் பம்பாய்க்குச்செல்லுஞ் சாலையிற் கொண்டுவந்து, அங்குள்ள ஒரு வண்டிச்சாலையிற் சேர்ப்பித்தான். அவ்வண்டிச்சாலையில் உள்ள வண்டிக்காரர் வண்டிக்காரர் அத்தனை பெயரும் அக்கள்வர்க்கு உடந்தையா யிருந்தவர்களாதலால் எங்களைக் கண்டு பெரிதும் வெருண்டார்கள். ஆனால், என் ஆ தந்தையாரும் அவ்வதிகாரியும் இனி அவர்கள் நல்வழியில் நடந்தால் அவர்களை ஒறுப்பதில்லை யென்று கூற, அவர்கள் உறுதிமொழிகூறி எங்களைப் பம்பாயிலுள்ள எங்கள் மாளிகையில் நேற்றுப்பிற்பகல் மூன்று மணிக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அவ்வதிகாரிக்குஞ் சேவகர்கட்கும் என் தந்தையார் ஏராளமாகப் பொருளுதவி செய்தார். நகர்காவற் சாவடியிற் சேர்ப்பிக்கப்பட்ட வெட்டுண்ட கள்வர் நால்வரையுங் காட்டிச், சிறையிலகப்பட்ட என் தந்தையாரையுந் தமையனையும் மீட் வரலாறுகளெல்லாந் தெரிவித்து, இறந்த அக்கள்வர் நால்வரோடு பம்பாயை அடுத்த அம் மலைநாட்டில் நெடுங்காலம் நடந்து வந்த கொள்ளையுங் கொலையும் அடியோடு தொலைந்தனவெனவும் வற்புறுத்தி அவ்வதிகாரியுஞ் சேவகர்களுந் தமக்கு மேற்பட்ட ஊர்காவற்றலைவருடைய நல்லெண்ணத்தையும் பாராட்டுரை களையும் பெற்றார்கள். இங்ஙனம் இவர்கள் மெய்ப்பித்துரைத்த வற்றில் என்மாமனையும் விடுதலைபெற்ற ஏனைக் கள்வர் நால்வரையும் பற்றி ஏதும் உரையாமற் கருத்தாய் விட்டனர்.

பம்பாய் வைத்தியசாலையிற் சேர்ப்பிக்கப்பட்ட என் மாமனார் இன்னும் நாலைந்துநாளில் முழுதும் நலம்எய்தி வீட்டுக்கு வருவார் அவரைப் பார்க்கும் மறுத்துவர் சொல்கிறார் அச்சொற் கேட்டு எண் பாட்டான் பாட்டிமார் முதல் யாங்கள் எல்லாரும் பெரியதோர் ஆறுதலும் மகிழ்ச்சியும் உற்றோம்.என் தந்தையார். அவர்க்குப் பரிகாரஞ் செய்யும் மருத்துவர்க்குத் தக்கபடி பொருளுதவி புரிந்திருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/312&oldid=1582618" இலிருந்து மீள்விக்கப்பட்டது