உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

❖LDMMLDMOLD-14✰ மறைமலையம்

1 என்னுடைய நூல்கள்

19-7-43

அன்புமிக்க ஐயா,

16 ஆம் நாள் சென்னைத் திருவல்லிக்கேணி கிரீன் அண்டு கம்பெனித் தலைவரும், நம் அன்பருமான, திரு. கனகராயர்க்கு நீங்கள் எழுதிய அன்புள்ள கடிதம், அவர் என்னிடம் சேர்ப்பிக்கக் கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் விரும்பியபடியே கனகராயர் புகைவண்டி வாயிலாக நூல்களை அனுப்பி, அதன் பற்றுச் சீட்டை வி.பி.பி.தபால்வழி அனுப்புவர்.எல்லார்க்கும் கொடுக்கிற கழிவுப்படியே தங்களுக்கும் பன்னிரண்டரை விழுக்காடு கழிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்பு கூர்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும். நூல்களை வாங்கி விற்பவர்கள் எல்லார்க்கும் விலைச் சீட்டிற் குறித்தபடியே கழிவு கொடுக்கப்பட்டு வருகின்றது; அதில் ஏதும் மாற்றமில்லை. எம்மிடம் எம்மிடம் நேரே வாங்கினாலும் கனகராயரிடம் வாங்கினாலும் எல்லார்க்கும ஒரே வகையான கழிவு கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருக்கின்றேன். இதைப் பற்றித் தாங்கள் சிறிதும் ஐயுறவேண்டாம்.

இனி, என்னுடைய நூல்களுக்கு விலைகள் மிகுதியா யிருக்கின்ற என்று எழுதி இருக்கின்றீர்கள். அதனை ஒரு வகையில் யானும் ஒப்புக்கொள்ளுகின்றேன். ஆனால் உயர்ந்த பொருள்களை உயர்ந்த நடையில் எழுதி வெளியிடும் ஆங்கில நூல்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பீர்களானால், எமது நூல்களின் விலை குறைந்ததென்றே சொல்வீர்கள். ஆங்கில நூல்களை விற்பவர்களும் அவர்களுக்கு நூல் எழுதிக் காடுப்பவர்களும், பெரும் பணக்காரர்கள்! அவர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் எவ்வளவு விலை உயர்ந்தனவா யிருப்பினும்,அவற்றை வாங்கிப் படிப்போர் தொகையும், நூறாயிரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/323&oldid=1582631" இலிருந்து மீள்விக்கப்பட்டது