உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

295

கணக்காய் இருப்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் நமக்கோ அப்படி இல்லை. சென்ற நாற்பதாண்டுகளுக்கு மேலாக யான் எழுதி வெளியிடும் நூல்களின் ஆராய்ச்சிக்கு வேண்டியனவும், யான் பயில்வனவும் ஆக இதுகாறும் எமது நூல் நிலையத்தில் வாங்கி வைத்திருக்கும் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய நூல்களின் விலையே இருபத்தையாயிர ரூபாய்க்குமேல் ஆய்விட்டது பேருழைப்பினாலும், பெரும் பொருட்செலவினாலும் யான் எழுதி வெளியிடும் நூல்களுக்கு இதுவரை இலட்ச ரூபாய் செலவாய் இருக்கின்றது. இவ்வளவு செலவுகளுக்கும் நன்முயற்சிக்கும், பொருளுதவி செய்யும் செல்வர்களாவது அரசர்களாவது மடாதிபதிகளாவது எவருமில்லை.

எமது

இறைவன் உதவி ஒன்றேகொண்டு இவ்வளவுசெலவும் யாம் தனியே ஏற்றுச் செய்யவேண்டிய தாயிற்று; இன்னும் செய்ய வேண்டுவதாயிருக்கின்றது. இந்த நிலையில் எம்முடைய நூல்களை வாங்கிக் கற்பவர்கள் கால், அல்லது அரை, அல்லது முக்கால் ரூபாய் மிகுதியாகக் கொடுத்து வாங்குவதைப் பெரிதாய் நினைக்கிறார்களே ஒழிய எமது பெருஞ் செலவையும், அச்செலவிற்கு உதவி செய்வாரின்மையையும், பேருழைப்பையும், சிறிதும் நினைத்துப் பார்க்கிறார்களில்லை. தமது வாழ்க்கைச் செலவிற்கும், மணச் சடங்கு, பிணச் சடங்கு கட்கும், கடன் வாங்கியாகிலும் மிகுதியாகச்செலவழிக்கின்றார்கள். அவை எல்லாம் பெருஞ் செலவாக அவர்களுக்குத் தோன்ற வில்லை. எப்போதோ அருமையாக வாங்கும், இரண்டொரு நூலுக்கு ஆகும் செலவையே பெரிதாக நினைக்கிறார்கள். இப்படி இருந்தால் நம் தமிழ்நாடு எக்காலத்தில் முன்னேற்ற மடையுமோ தெரியவில்லை. இறைவன் அருள் செய்க! நலம்.

2 - நற்சான்றிதழ்

அன்புள்ள,

மறைமலையடிகள்

4-9-44

அன்புமிக்க செந்தமிழ்த் திருவாளர்... அம்பலவாணர் திருவருளால் எல்லா நலங்களும் மேன்மேற் பெருகுக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/324&oldid=1582632" இலிருந்து மீள்விக்கப்பட்டது