உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

❖LDMMLDMOLD-14 →

24-8-44ல் தாங்கள் அன்புடன் எழுதிய கடிதங் கண்டு என் மனைவியும் யானும் பெரிதும் மகிழ்ந்தோம். தங்களைப்போல் உண்மையன்பு வாய்த்த தமிழறிஞருடன் கூடி அளவளாவுதலே எமக்குப் பெருமகிழ்ச்சி தருவதாகும்.

.

தாங்களே விரும்பிய நற்சான்றிதழொன்று இதனுடன் வைத்தனுப்பியிருக்கின்றேன் அம்பலவாணர் திருவருளால் அது தாங்கள் விரும்பிய நலனைப் பெறுதற்குதவி செய்யுமென்று நம்புகின்றேன். நாம் செய்யும் முயற்சி நமக்கும் பிறர்க்கும் பயனளிப்பதாயிருக்குமேற் சிவபிரான் அதனை நன்கு முடித்து வைப்பானென்பது திண்ணம். இறைவன் திருவருட்டுணையையே நாம் கடைப்பிடியாகப் பிடித்தல் வேண்டும். தாங்கள் நீடினிது வாழ்கவென்று சிவபிரான் திருவடிகளை வேண்டி வழுத்தும்.

அன்புமிக்க,

மறைமலையடிகள்

3 - சொற்பொழிவு

26-12-44

அன்புமிக்க திருவாளர்..... அவர்களுக்கு, அம்மை அப்பர் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக.

நீங்கள் அன்பு கூர்ந்து அனுப்பிய ரூபாய் ஐந்தும் இன்று கிடைத்தது. அதற்காகத் ‘தமிழர் மதம்' என்னும் நூல் ஒன்றைத் தங்கட்குப் பதிவுத் தபாலில் இன்றைக்கு அனுப்பியிருக்கிறேன்.

நீங்கள் சொற்பொழிவுக்கு என்னை அங்கு வருவிக்க முயல்வது தெரிந்து மகிழ்கின்றேன். நம் தமிழ்த் தொண்டு சிவத் தொண்டுகள் அங்கெல்லாம் பரவி எல்லார்க்கும் அறிவுக்கண் திறக்கும்படி செய்யும் முயற்சி இம்மையிலும் மேலும் மறுமையிலும் பெரும் பயன் அளிக்கும்.

முதலில் எம்மை வருவிப்பதற்கு மட்டும் இருநூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஒரு தொகையைத் திரட்டி அனுப்புங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/325&oldid=1582634" இலிருந்து மீள்விக்கப்பட்டது