உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

கடிதம் - 3

என் கண்ணனையீர்,

நேற்று நான் அரைகுறையாய் வரைந்து அனுப்பின கடிதத்தைப் பார்த்து நீர் மிகமகிழ்ந்து எழுதி இன்று உச்சிப்போதில் எறிந்த கடிதம் எனக்கு ஆராமகிழ்ச்சி தந்தது. எனக்கும் என் றங்கைக்கும் நடந்த சம்பாஷணையில் என்றங்கையின் நுட்பறிவை மிகவியந்து, அச்சம்பாஷணையின் முடிவைத் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறீர்கள். இன்று பிற்பகலிற் சாப்பாடு முடிந்தபிறகு என் தாயார் படுத்துறங்கினாள்; புருஷர்கள் யாரும் இல்லை, எல்லோரும் வெளியே அலுவலின்மேற் போய்விட்டார்கள். அச்சமயம் பார்த்து என் அருமைத்தங்கை என்னிடம் மெத்தை மேல் வந்தனள். அவள் வருவதற்குச் சிறிது முன்னே தான் உம மது கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவள் வரும் அரவங்கேட்டு அதனை அப்பால் மறைத்து வைத்துவிட்டேன். அவள் என்னண்டை வந்தவுடனே, “அக்கா, நேற்றிராத்திரி நாம் பாதியில் நிறுத்திவிட்ட பேச்சை மறுபடியும் பேச எனக்கு ஆசையாயிருக்கின்றது. அக்கா, நம்மவர்கள் மற்றச்சாதியாரை மேலுக்கு வரவொட்டாமல் தடை செய்கிறார்கள் என்று சொன்னையே, அப்படி ஏன் அவர்களைத் தடை செய்ய வேண்டும்?” என்று மிகவும் ஆவலோடு கேட்டாள்.

66

“அதற்குப் பொறாமையே தான் காரணமாயிருக்க வேண்டும் என்பது எனக்குத் தோன்றுகின்றது. நம்மவர்கள் தம்மை உயர்ந்த சாதியாராக எண்ணி மகிழ்ந்திருத்தலால், மற்றவரும் தம்மைப் போல உயர்வடையவிட்டால் அவர்கள் தம்மை மதியார்கள் என்றும், தமக்குள்ள உயர்வு குறைந்து போகுமென்றும், அதனால் தமக்குள்ள வரும்படி சுருங்கி விடுமென்றும் நினைத்துத்தான் அதற்கு இடந்தருகிறார் களில்லை என்று தெரிவிக்கின்றேன்" என்று நான் விடை பகர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/56&oldid=1582014" இலிருந்து மீள்விக்கப்பட்டது