உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் -14

தனைக் கேட்டதும் அவள்சிறிது நேரம் வாய்பேசாமற் சுவரைப் பார்ப்பதுபோலிருந்து என்னைநோக்கி, “நல்லது,அக்கா நம்ம பிராமணச்சாதியில் இந்தத்தேசத்தில் எத்தனைப் பேர் ருப்பார்கள்?' என்று மிகவும் ஆழ்ந்த சிந்தனையோடு

கேட்டாள்.

66

"இவ்வளவுபேர் என்று எனக்கு மொத்தக்கணக்குத் தெரியாது; என்றாலும் நம்மவர்கள் இலட்சக்கணக்காகத்தான் அங்கங்கே இருக்கிறார்கள் என்பதுமாத்திரம் நிச்சயம்” என்றேன்.

உடனே னே அவள், “நல்லது, இவ்வளவுபேரும் போதுமான வரும்படி பெற்றுப் பிழைத்துத்தானே வருகிறார்கள். மற்றச் சாதியாரை உயரவிடாவிட்டாலும், நம்மவர் குடும்பங்களே ஒன்று பத்து நூறு ஆயிரமாகப் பெருகிவிட்டால் அப்போது நம்மவர் என்ன செய்வார்கள்? அல்லாமலும், நம்மவர்களில் ஒவ்வொருவரும் தம்மைத் தாம் உயர்வாகத்தானே மதித்திருக் கிறார்கள். அப்படி ஒவ்வொருவரும் தம்மை உயர்வாக மதித்திருப்பதால், நம்மவர் களுக்கள் ஏதாவது தாழ்வுவருகிறதா? இல்லையே. இது போலவே, மற்றச்சாதியார்களில் நற்குணமும் நற்செய்கையும் படிப்பு முள்ளவர்களை நம்மோடு சேர்த்துக் கொண்டு,அவர்களுக்கும் நமக்கும் ஏதும் வித்தியாசம் இல்லாமல் நடத்தி வருவோமானால், நம்மவர்களுக்க இன்னும் நல்லதாகு மோயன்றித் தீங்கொன்றும் வராதே” என்று கூறினாள்.

66

அவள் நுட்ப அறிவின் திறத்திற்கும், என் மனத்தில் உள்ள எண்ணப்படியே பேசினதற்கும் நான் மிகவும் உள்ளங்களித்து அவளைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தம் வைத்து, அறிவில் மிக்க என் ஞானவிளக்கே, நீ சொல்லிய தொவ்வொன்றும் பொருத்தமாகவே இருக்கின்றது. ஆனாலும் என் செய்யலாம்! சிறு குழந்தையாகிய உனக்குள்ள அறிவுங் காருணியமுங்கூட நம்மவர்களில் மிக வயது முதிர்ந்தவர்களுக்கும் இல்லையே? நம்மவர்களிற் பல்லுஞ் சொல்லும்போய் வாய்திறந்தாற் காத தூரம் நாறும் அசுத்தக் கிழவர்கள்கூட மற்றச்சாதியாரிற் சுத்தி பத்தியுடைய வர்களைக் கண்டாலும் ஏழடி எட்டி நடக்கிறார்கள். மற்றச் சாதியார் வெயிலிற் களைத்துச் சிறிதுநேரம் ஒதுங்குவதற்குத் தம்வீட்டு ஒட்டுத்திண்ணை யண்டை வந்தால் நம்மவர்கள் தமது வீடு தீட்டுப்பட்டுப்போம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/57&oldid=1582015" இலிருந்து மீள்விக்கப்பட்டது