உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

29

அவர்களைத் துரத்துகிறார்கள்! அல்லது தெரியாமல் உட்கார்ந் திருந்து எழுந்துபோனார்களானால் அவர்களிருந்த விடத்திற் சாணிகரைத்துத் தெளிக்கின்றார்கள். மாட்டுச்சாணியிலும் ஆறறிவுடைய மனிதன் தாழ்ந்தா போயினான்! பசியால் உயிர் போகிறதென்று பிறசாதியான் ஒருவன் வந்தால், அவனுக்கு அன்னமிடிற்றீட்டுப் பட்டுப்போமென்று நம்மவர் அன்னஞ் சிறிதும் இடுவதில்லை; ஒருகால் கொஞ்சம் இரங்கிச் சோறிட மனம் வந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் உண்டபிறகு மிச்சம் இருந்தாற் சிறிது இடுவார்கள்! இதற்குட் பசித்து வந்தவனுக்குப் பாதிஉயிர்போய்விடும்! ஐயோ! தாகத்தால் மிக வருந்திவந்தவர் களுக்குத் தண்ணீர் கொடாமல் வெருட்டின நம்மவர்கள் எத்தனை பேரை நான் பார்த்திருக்கின்றேன்! தம்மை உயர்ந்தசாதியாராக மதித்ததனால் நம்மவர்களுக்கு வந்த கேட்டைப் பார்!. அவர்கள் சிறிதும் மன இரக்கம் இல்லாதவர்க ளானார்கள்! மற்றச்சாதியாரைத் தம்மோடொத்த உயிர்கள் என்று நினையாமல் தாழ்வாக நினைத்துப் பாவத்தையும், தம்மை உயர்வாக நினைத்து அகங்காரத்தையும் கட்டிக் கொண்டார்கள்! உடம்போடு அழிந்து போவதாகிய சாதிவித்தியாசத்தைப் பெரிதாகமதித்து, உயிர்க்கு இனிமைதருகின்ற சீவகாருணிய மென்னும் பெரும்புண்ணியத்தை இழந்து போனார்கள்! நம்மவர்கள் இப்பெரும் பாவத்தினின்று எப்படிக் கரையேறப் போகின்றார்கள்! என அல்லும் பகலும் எண்ணிப்பரிதவித்து வருகின்றேன்” என்று நான் சொல்லுகையில் என் தங்கை மடக்கி,

டை

“ஏன் அக்கா, இப்போது இங்கிலீஷ் படிக்கிறவர்களில் நம்மவர்கள் சாதிவித்தியாசத்தை அவ்வளவாகப் பாராட்டுகிற தில்லையென்று நீ அடிக்கடி சொல்லி வந்திருக்கிறாயே?” என்று

வினவினாள்.

"கண்மணி, இங்கிலீஷ் படித்த நம்மவர்கள் அழகை என்னென்று சொல்வேன்! இங்கிலீஷ் படித்த நம்மவர்கள் தம் எண்ணம் போலெல்லாம் நடப்பதற்குச் சௌகரியமாகச் சாதி வித்தியாசம் பாராட்டுவதில்லையென்று சொல்லுகிறார்களே தவிர, உண்மையில் அவர்கள் தாம் அதனை மிகுதிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலீஷ் படித்த சிலர் குசினிக்காரப்பறையர் வைத்திருக்கும் சாப்பாட்டுக் கடைகளிற்போய்க் காப்பிவாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/58&oldid=1582016" இலிருந்து மீள்விக்கப்பட்டது