உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் -14

குடிக்கிறார்கள். வேறுசில தின்பண்டங்களும் வாங்கி உண்கிறார்கள். இதனைக் கேள்விப் பட்ட அவர்கள் உற்றார் உறவினரான வைதிகப் பிராமணர் அவர்களைப் பார்த்து, இப்படிப் பறையர்கடைகளிலே சென்று காப்பி உண்பது தகுமா? என்று வினாவினால் அப்போது மாத்திரம் பறையன் என்றால் என்ன? அவன் மனிதன் அல்லனோ? அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? வெறுந் தண்ணீர் வாங்கிக் குடிப்பதாற் குற்றம் சிறிதும் இல்லை. இங்கிலீஷ் படித்த நாங்கள் வித்தியாசம் பாராட்டுவதில்லை. நீங்கள் கருநாடகப்பேர்வழிகள்; இந்தக் காலத்திற்கு இவையெல்லாம் கூடா, என்று மழுப்பிச் சொல்லி விட்டுப் போய்விடுகிறார்கள். இப்படிச் சொல்லும் இவர்களே தாம் உத்தியோகம் பார்க்கும் தொழிற்சாலைக்குட் சென்றால், தம்மினும் மேம்பட்ட அறிவினை உடையராய்த் தம்மோடொத்த நிலையிலும் தமக்குமேற்பட்ட நிலையிலும் உத்தியோகத்திலுள்ள வேளாளர், வடுகர் முதலான பிறசாதியாரைப் பார்த்துப் பொறாமைகொண்டு புழுங்கி இந்தச்சூத்திரப்பயல்கள் பிராமணாளான நமக்குச்சமமாயும் நமக்குமேலாயும் வந்து விட்டார்களே என்று தமக்குட் கூடிப் பேசிக்கொண்டு அவர்களைக் கெடுத்துக் கீழ்தள்ளச் சமயம் பார்க்கிறார்கள். இன்னும் தாம் உத்தியோகஞ்செய்யும் இடங்களில் தம்மோடொத்த பிராமணர்களையே அலுவலிற் கொண்டுவந்து அமர்த்தி வைக்கிறார்களே யல்லாமற் பிறசாதியாரில் உத்தமராயும் கல்வியறிவிற் றேர்ந்தவர்களாயும் இருப்பவரையுங் கூடத் தாமிருக்கும் இடங்களிற் சேர்ப்பதில்லை. உயர்ந்த நியாயாதிபதி வேலையினின்று விடுதிபெற்ற நம்மவர் ஒருவர் தாமிருந்த அவ்வேலைக்கு வேளாளர் ஒருவரும் பிராமணர் ஒருவரும் தக்கவராயிருக்கக் கண்டு உடனே தம்மோடொத்த பிராமணரைத் தம்மிடத்து அழைத்து நீர் நானிருந்தநியாயாதிபதி வேலைக்குவரப்

பிரயத்தினம் பண்ணும்; நீர் இதில் அசட்டையாய் இருந்து விடுவீரானால் ஒரு சூத்திரப்பயல் வந்து உட்கார்ந்துவிடுவான் என்று மிக்க காரத்தோடுஞ்சொல்லி, அவரை ஏவி அவர்க்கே அவ்வேலையைச் செய்து வைத்தனராம். இங்ஙனமே எனக்கு எட்டும் செய்தி ஒவ்வொன்றும் இங்கிலீஷ் படித்த நம்மவர்கள் அதுபடியாத நம்மவர்களினும் மிகுந்த மனவைரங் கொண்டு சாதிவித்தியாசம் பாராட்டி வருகின்றனர் என்பதை அறிவுறுத்துகின்றது. ஆகையால், இங்கிலீஷ் படித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/59&oldid=1582017" இலிருந்து மீள்விக்கப்பட்டது