உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

31

நம்மவர் தம்முடைய சௌகரியத்தின் பொருட்டுச் சாதி வித்தியாசம் பாராட்டுவதில்லையே யொழியப், பிறசாதியாரின் நன்மையின் பொருட்டு அங்ஙனம் செய்கின்றனரென்பது எள்ளளவுந் தோன்றவில்லை” என்றேன்.

என். சொற்கள் ஒவ்வொன்றனையும் உற்றுக்கேட்ட என் தங்கை “அப்படியா! அப்படியா!” என்றுஏங்கி “நம்மவர்கள் அவ்வளவு கல்நெஞ்சம் உடையவர்களா!” யவர்களா!” என்று மெல்லெனக் கரைந்து “நல்லது, அக்கா, நம்மவர்களிற் புருஷாள்தாம் அப்படியிருக்கிறார்கள். ஸ்திரீகள் எப்படிப்பட்டவர்கள்? அதனைச் சிறிதுசொல்” என்று கேட்டாள்.

66

"ஆ! நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையா! நம்மவர்களில் ஆண்மக்களுக்காவது சிறிது கல்வியுணர்ச்சி இருக்கின்றது; நம்முடைய பெண்பாலார்க்கு அதுவும் இல்லை; இவர்களிற் படித்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தப்புந்தவறுமாக வண்ணான் கணக்கு எழுதத் தெரிந்தவர்களேயல்லாமல் வேறல்லர். அறிவினை வளரச்செய்யும் உயர்ந்த நூல்களுள் ஒன்றேனும் இவர்களுக்குத் தெரியாது. எழுத்துக்கள் சில எழுதக்கற்றுக்கொண்ட தமது கல்வியையே பெரிதாகமதித்து இறுமாந்திருக்கிறார்கள். தம்மைத் தேவமாதர்கள் என்றும் மற்றச்சாதியார் அனைவரையும் சூத்திரப் பேய்கள் பறைப் பிசாசுகள் என்றும் எண்ணியிருக்கிறார்கள். குளங்களுக்குப் போய்க் குளித்துவரும் போது மற்றச்சாதியாரைக் கண்டு இவர்கள் துணுக்குற்று அப்புறமும் இப்புறமும் ஒதுங்குவதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வராமல் இருப்பதில்லை. பல்வகைச் சாதியாரும் தோய்ந்து அசுத்தப்படுத்தின குளத்தின் நீரிலே முழுகி வரும் இந்தத்தேவமாதர்கள்மேல் அவ்வசுத்தத்திற் சிறிதாயினும் படாமல் இருக்குமா? என்று நான் எனக்குள்ளே எண்ணிக் கொள்வதுண்டு. இவர்களுக்குத் தருமசிந்தையென்பது சிறிதுங் கிடையாது. எந்நேரமுந் தம்மை உயர்வாகவும் பிறரைத் தாழ்வாகவும் நினைப்பதால், பிறரைக்கண்டால் அருவருப்புங் கோபமுங்கொண்டு அகங்கரிக்கின்றார்கள். அதனால் இவர்கள் மனம் சிறிதும் இளக்கமின்றிக் கல்லைப்போற் கரடாய்ப் போய் இருக்கின்றது. இவர்களுக்கு அன்பும் பட்சமும் இன்னபடி யென்றே தெரியா. அதனால் இவர்கள் தம் தாய் தந்தையர், சகோதரர் சகோதரிமார், கணவர், உற்றார் உறவினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/60&oldid=1582018" இலிருந்து மீள்விக்கப்பட்டது