உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் -14

முதலியவர்களிடத்துங் கூட உண்மையன்பு பாராட்டுவதில்லை. தமக்கு உடுக்க உயர்ந்த பட்டுப்புடைவையும் உண்ண நாவிற்கினிய பண்டமும், பூணச் சிறந்த நகைகளும் பிற வசதிகளும் கிடைத்தால் தமது வாழ்க்கையைத் தேவ வாழ்க்கையாக எண்ணி இறுமாந்து கிடக்கின்றார்கள்; இவ்வளவுங் கிடையாவிட்டால் தம்மவர்கள் மேல் மிக மனம்நொந்து வெறுப்புற்றிருப்பார்கள். இவர்களின் இவ்வறியாமைக் குணத்தினாலும் செய்கையினாலும் நம் ஆண்மக்கள் செய்யும் தீயசெய்கைகளுக்கும் அவற்றால் அடையும் துன்பங்களுக்கும் ஓர் அளவே இல்லை; அம்மா” என்றேன்.

“அப்படியானால் அக்கா, உன்னைப்போல நம்ம பெண் மக்களிற் படித்தவர்கள் இல்லையா?” என்று வினாவினாள்.

66

‘அம்மா, எனக்குத்தான் என்ன தெரியும்? நம் அண்ணா சுப்பிரமணியன் தமிழ்க்கல்வியிற்றேர்ந்த அறிஞர்களிடம் எந்நேரமும் பழகிவருவதால், அவன் என்னைத் தமிழ் நூல்கள் படிக்கும்படி தூண்டி எனக்குப் பலஉயர்ந்த தமிழ்ப்புத்தகங்கள் வாங்கித்தந்து வருகிறான். நானும் அவற்றை மிகுந்த ஆவலோடு படித்து வருகின்றேன். இன்னும் நான் படிக்கவேண்டிய நூல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அது நிற்கட்டும், என்னைப்போலப் படிப்பவர்களும், என்னிலும் மிகுதியாகப்படித்தவர்கள் சிலரும் நம்முடைய பெண்மக்களில் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லாரும் குடத்துக்குள்ளே வைத்த விளக்குப்போலப் பொலி விழந்து இருக்கிறார்கள்.நம்மவர்களிற் படியாத மாதர்களெல்லாம் படித்த அப்பெண்மணிகளைக்கண்டு பொறாமைகொண்டு ளனஞ்செய்வதே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் மிக மனம்நைந்து தமது கல்வியைப் பயன்படுத்தக் கூடாமல்வீணே காலங்கழித்து வருகின்றனர்; உற்றார் உறவினர் பழிப்புக்கு அஞ்சின இவர்கள் பெற்றோர்களும் இவர்களை மேன்மேலும் படிக்க இடந்தருவதில்லை. என் செய்வார்கள்! பாவம்! நம் அண்ணா சுப்பிரமணியனுடைய ய உதவியில்லாவிட்டால், நம்முடைய பெற்றோர்களும் என்னை இவ்வளவு கூடப் படிக்கவிடமாட்டார்கள்” என்று மனம் விண்டு கூறினேன்.

இதனைக்கேட்ட என் தங்கை கண்கலங்கி, "ஐயோ! இது என்ன கொடுமை. அக்கா, ஏன் அவ்வளவு கொடுமைக்கும் அவர்கள் ஆளாயிருக்கவேண்டும்? நம்மிற் படித்த அப்பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/61&oldid=1582019" இலிருந்து மீள்விக்கப்பட்டது