உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

33

மணிகள் தம் எண்ணம்போற் படித்துத் தாம் படித்ததைப் பிறர்க்கு எடுத்துச்சொல்வதிற் குற்றம் என்ன?” என்று வினவினோள்.

66

'குற்றம் சிறிதும் இல்லை. ஆயினும், உற்றார் உறவினர் பெற்றோர்க்கு அடங்கியிருக்கும் வரையிலும் இவர்கள் அவர்கள் சொற்படிதான் நடக்கவேண்டு மேயல்லாமல், தாமாகவே ஏதுஞ் செய்தல் ஆகாது” என மொழிந்தேன்.

"பெற்றோர்கள் கற்பிப்பது நல்லதானால் அதற்கு அடங்கி நடக்கவேண்டுவது முறைதான். அவர்கள் நலமல்லாததைக் கற்பித்தால் அதற்கும் அடங்கி நடப்பது தகுமா? அப்படி அடங்கி நடவாவிட்டால் என்ன?” என்று மீண்டும் வினவினாள்.

66

'அம்மா, அவர்கள் சொற்படி நடவாவிட்டால் அப்பெண் மணிகள் அடிபட்டும் உதைபட்டும் பலவாறு அவர்களால் துன்பப் படுவார்கள் என்றேன்.

66

'அப்படியானால் அப்பெண்கள் அவ்வளவு கொடுமை செய்பவர்களை விட்டு நீங்கி வெளியேபோய்த் தனியே காலங்கழிக்கலாகாதா?” என்று கேட்டாள்.

“நமது தேசத்தில் பெண் மக்கள் தமக்கு உற்ற ஆண்துணை யின்றித் தனியே சென்று காலங்கழிக்க முடியாது;” என்று உரைத்துப் பின்னும் அவள்மனநிலையைத் தெரிந்துணர்தற்காக; ‘அது நிற்கட்டும், நான் நமது பெற்றோரையும் மற்றவர்களையும் எல்லாம் விட்டுப் பிரிந்து தனியே போய் எங்கேயாவது இருக்கலாமா?” என்று முகஞ்சுளியாமல் அவளைக்கேட்டேன்.

66

இச்சொற்களைக் கேட்டதும் என் தங்கையின் கண்களில் நீர் முத்து முத்தாய்த் துளித்தது. உடனே அவள் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு, “அக்கா, நீ அப்படியெல்லாம் எங்களை விட்டுப்போய்விடாதே; உன்னைப் பிரிந்து நான் எப்படியிருப்பேன்? அக்கா, அக்கா என்று உன்னையே கூப்பிட்டுக் கொண்டு அலைய மாட்டேனா! நீ எங்கேபோனாலும் உன்னை நான் விட மாட்டேன். அம்மா, அப்பாவிடம் சொல்லி நீ எங்கேபோனாலும் உன்னை அழைத்துக் கொண்டு வந்துவிடுவேன். அக்கா, நீ என்னை விட்டுப் போய்விடுவாயோ? அம்மாவிடம் போய்ச் சொல்லட்டுமா?" என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள்.

அவள் எழுந்ததைக்கண்டு மிகவும் அஞ்சி அவளை உடனே கையைப்பிடித்து மடியில் உட்காரவைத்து, “என் செல்வமே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/62&oldid=1582020" இலிருந்து மீள்விக்கப்பட்டது