உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் -14

உன்னை விட்டுப் போவேனா? நான் சும்மா விளையாட்டுக்காக உன்னைக் கேட்டேன்.எப்படி நீ என்னைப் பிரிந்திருக்கக் கூடாமல் மனம் வருந்துகின்றாயோ, அப்படித்தானே நம்மிற் படித்த பெண்களையும் அவர்களைச் சேர்ந்தவர்கள் பிரியக்கூடாமல் வருந்துவார்கள். இதனை உனக்குத் தெரிவிப்பதற்காகவே அப்படிச் சொன்னேன். அதற்காக நீ துயரப்படாதே என் கண்மணி!” என்று சொல்லி அவளை முத்தம் வைத்தேன்.

என் அருமை நண்பரே, இவ்வளவுதான் எங்களுக்குள் நடந்த சம்பாஷணையின் விவரம். நீரும் நானும் அளவளாவி உயிரும் உடலும்போற் பிரிவின்றிக் கலந்திருந்து இல்லற வாழ்க்கையை நடத்துவதற்கு நாம் இருவரும் தொலைவிலுள்ள ஒரு நகரத்திற்குப் போய்விட வேண்டுமென்று எழுதினீரே. நீர் நும்முடைய தாய் தந்தையர் உற்றார் உறவினர் முதலிய எல்லாரையும் அறவேவிட்டு என் பொருட்டு வரத்துணிந்தபோது, நான் மாத்திரம் அதற்கு இசையாமல் இருக்கலாமா என்று நீளநினைந்துபார்த்து யானும் என் தாய்தந்தையர் முதலான எல்லாரையும் துறந்து நும்முடன் போவதற்குத் துணிவு கொண்டேன். அங்ஙனந் துணிவுகொண்ட சில நிமிஷங்களுக் கல்லாம் என்றங்கைக்கும் எனக்கும் மேற்கூறிய சம்பாஷணை நடந்தது, பாரும், எங்கள் பார்ப்பாரச் சாதியிற் படித்த பெண்கள் சிலர் படுந்துன்பத்தையான் எடுத்துச் சொன்னபோது என் தங்கை மிக மனம் உருகி, ‘அவர்கள் ஏன் தம்மைச் சேர்ந்தாரை விட்டு நீங்கி வெளிப்புறப்பட்டுத் தன்னந்தனியே வாழலாகாது என்று கேட்டவள். பிறகு நான் தனியே பிரிந்துபோயிருக்கலாமா என்று அவளைக் கேட்டதும், அதுகாறும் மிக்க நுண்ணறிவோடும் நியாயவுணர்ச்சியோடும் பேசிவந்த தன் அறிவையும் மறந்து, என்மேல் உள்ள அன்பினால் அங்ஙனம் பிரிவதற்கு உடன் படாமல் வெம்பினாள். எவ்வளவு நுண்ணறிவுடையோ ராயிருந்தாலும் அவர் ஒருவரிடத்துண்டான அன்பின் வசப்படுவாரானால் தம் அறிவையும் நியாய முறையையுங் கைவிடுவாரென்பது இதனால் விளங்குகின்றதன்றோ? என் ஆருயிர்க் காதலரே, என் தங்கை என்மேல் வைத்த பிரியத்தால் என்னைப் பிரிந்திருக்க மாட்டாளே! என்னைப் பிரிந்தால் அவள் எவ்வாறாவாளோ என்று நினைக்க என் நெஞ்சம் பகீரென் கின்றதே! பாலினுந் தூயமனமுடையீர், உம்மையும் அகன்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/63&oldid=1582021" இலிருந்து மீள்விக்கப்பட்டது