உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

35

றிருக்க என் உள்ளம் இசைகின்றதில்லை, என்னை அகன் றிருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் உமக்கு ஒவ்வொரு வருஷமாய் இருக்கின்றதென வரைந்தீர்; எனக்கோ அப்படியில்லை, உம்மை விலகியிருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு ஒவ்வோர் ஊழியாய் இருக்கின்றதே! உடலானது உயிரையும் பிரிந்திருக்கும், மலரானது மணத்தையும் பிரிந்திருக்கும், நானோ உம்மைப் பிரிந்திரேன். கல்வியின் மிக்க வல்லவரே, உமது கல்வியின் உயர்வையும், குணத்தின் நலத்தையும் அழகின் அமைவையும் நான் அறிவேன்; என்னுடைய அருமைகளை நீர் அறிவீர். நம் இருவர்தம் பொருத்தத்தையும் பிறர் எவர் அறிவார்? சாதி வித்தியாசமே நம்முடைய தேசத்தார்க்கு உயர்ந்த தத்துவஞான மாயிருக்கின்றது; சாதி வித்தியாசத்தால் நம்மவர் கண்ட ன யாவை? அகங்காரமும், கோபமும், பிரிவும், பகையும் அல்லவோ? சாதியில் வேறுவேறான நாம் இருவரும் பொருந்தியிருக்க ஐயோ! நம்மைச் சேர்ந்தவர்கள் இணங்குவார்களா? ஒருகாலும் இணங்கமாட்டார்களே! என் செய்வேன்! உடம்போடு ஒருங்கு இருக்கவேண்டுமாயின் என்னவர்கள் எல்லாரையுங் துறக்கலாம். என்றங்கையை எவ்வாறு துறப்பது! ஆ! ஈ தென்ன இது! திருவல்லிக்கேணிக்குப் போக வேண்டும் கீழே வா என்று என் அன்னை அழைக்கிறாளே. என் அன்பரே, மற்றவை பின்னால் எழுதுகிறேன். எத்தனைநாள் சென்று இங்கே வரும்படியாய் இருக்குமோ,என்னை மறவாதீர்!

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/64&oldid=1582022" இலிருந்து மீள்விக்கப்பட்டது